பக்கம்:அறிவியல் விருந்து.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மின்னலும் இடியும் 密7 தாக்குதல் கூடும். நாம் இருக்கும் அறையில் சாளரக் கதவுகள் திறந்திருந்தால் நாம் தாக்கப்பெறுவதற்கு வாய்ப்புகள் குறைவு; ஆனால் மழை உள்ளே சிதறாம லிருப்பதற்குக் கதவுகளை மூடி வைத்திருக்கலாம். இடிமழை உண்டாகும்பொழுது நதுை அறிவுக்குகந்த முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமேயன்றிப் பீதிக்கு இடன் கொடுக்கலாகாது; நமது தலை மீது இடி விழும் என்பது மிகவும் அரிதான செயல்தானே! இவ் விடத்தில் செருமானிய அறிவியலறிஞர் ஒருவர் கூறியதை நினைவில் வைத்துக்கொள்வோமாக. அவர் கூற்று: - "நீங்கள் இடியைச் செவிமடுத்தால் மின்னல் உங்களைத் தாக்கவில்லை. நீங்கள் மின்னலைக் கண்ணுற்றால், அஃது உங்கள் மீது விழுவதினின்றும் தவறிவிட்டது. அஃது உங்களைத் தாக்கினால், அத் தாக்குதல் உங்கட்குத் தெரியாமற் போய்விடும்.'