பக்கம்:அறிவியல் விருந்து.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. ஞாயிற்றுக் குடும்பம் வாணவெளியை ஓரிரவில் அண்ணாந்து நோக்கினால் கண்சிமிட்டும் விண்மீன்கள் எண்ணற்றவை காணப்படு கின்றன. இவை அத்தனையும் கதிரவர்களே. அளப் பரும் சேய்மையிலிருப்பதால், ஒரு பெரிய தொலை தோக்கியில்கூட அவை சிறு சிறு புள்ளிகள்போல் தோன்றுகின்றன. அவற்றின் உண்மை8:ான உருவத்தை தாம் தெளிவாக அறியக்கூடவில்லை. இங்ங்ணம் விண் வெளியில் கோடிக்கணக்காகக் காணப்பெறும் மீன்களில் யாதேனும் ஒன்றனைக் குறித்து விரிவாக ஆய்ந்து அதன் சிறப்பியல்புகளை அறிந்துகொண்டோமாயின் ஏனை யவற்றின் சிறப்பியல்புகளையும் அறிந்துகொண்டவர் : ாேவோம். அத்தகைய ஆராய்ச்சிக்குத்தக்க விண்மீன் தமக்கு மிக அருகில் அமைந்துள்ள கதிரவனே யாகும். கதிரவனின் சிறப்பியல்புகளை விரிவாக ஆய்ந்து கண்டோ மாயின் அவற்றை விண்மீன்களின் சிறப்பியல்புகளாகக் கொள்வதோடன்றி, அகிலத்தின் தத்துவத்தையும் ஒருவாறு உணர்த்து கொள்ளலாம். உலகிலுள்ல பல நாட்டினரும் பகலவனை வணங்கினார்கள் என்ற கருத்தை, “உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு’’’ என்ற திருமுருகாற்றுப்படை அடிகள் குறிப்பிடுகின்றன. இத்தகைய பலர் புகழ் ஞாயிற்றைப் பல கோன்கள் சுற்றி șcanos 1. திருமுரு. அடி (1-2)