பக்கம்:அறிவியல் விருந்து.pdf/58

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*g அறிவியல் விருத்து புள்ளவனாக இருப்பான். இங்குத் தன் கைகால்களை எவரி தில் இயக்கக்கூடிய அவன் பகலவனின் மீது அவற்றை இம்மி அளவேனும் அசைக்க முடியாது. சூரியன் தமக்கு 9,30,00,000 மைல் தொலைவிலுள்ளது. சூரியனிடமிருந்து உற்பத்தியாகும் வெப்பத்தின் அளவைத் திட்டமாகக் கணக்கிட முடியாது. எனினும், அதன் மேற்பரப்பின் வெப்பநிலை :2,0009F என்றும், உட்புறத்தின் வெப்பநிலை 4,00,00,000°F என்றும் ஒருவாறு கணக்கிட்டுள்ளனர். இரண்டேகால் மைல் குறுக்களவும் ஒன்பது கோடியே முப்பது இலட்சம் மைல் உயரமுமுள்ள ஒரு பனிக்கட்டிக் கம்பத்தின் மீது கதிரவன் வெப்பம் முழுவதையும் செலுத்தினால் அக் கம்பம் ஒரு நொடியில் நீராக உருகிவிடும் என்றும், எட்டு விநாடி களில் அந்நீர் ஆவியாகவும் மாறிவிடும் என்றும் கூறப் பெறுகின்றது. இவ்வளவு வெப்பத்திலும் நான் ஒரு சிறி தளவு தான் பெறுகின்றோம். அவன் ஒராண்டில் தரும் வெப்பம் முழுவதும் 27,000 கோடி ரூபாய் என்று கருதி னால், பூமிக்குக் கிடைக்கும் வெப்பம் 135 ரூபாய் தான்; கதிரவனிலுள்ள நீசிய அணுக்கள்" பரிதிய அணுக்களாகக்" கணந்தோறும் மாறிக்கொண்டே இருப்பதால் இவ்வளவு ஆற்றலும் ஒளியாகவும் வெப்பமாகவும் வெளி வருகின்றது. சூரியனின் அமைப்பு உள்ளும்புறமும் ஒரே திண்மை யாக இல்லை. அது வெங்காயத்தைப் போன்று புரை புரையாகக் காணப்பெறுகின்றது. முதற்புரை ஒளி முடி' என்பது. இதனை நாம் கண்ணால் காணமுடியாது. கண்களைப் பறிக்கும் கதிரவன் ஒளியில் இது மறைந்து 2. offiti são isso-Hydrogen atoms. 3. i-flá'u osprässis-Helium atoms, 4. of gplo-Corona.