பக்கம்:அறிவியல் விருந்து.pdf/66

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

繁 அறிவியல் விருந்து இக்கோள் மிகச் சிறியதாக இருப்பதாலும், கதிரவ லுக்கு அணித்தாக இருப்பதாலும் அது பகலவனைக் கேேவகத்துடன் சுற்றி ஒடி வருகின்றது. இது கதிரவ னைச் சுற்றுவதற்கு எண்பத்தெட்டு நாட்கள் ஆகின்றன: தன்னைத்தானே சுற்றிக்கொள்வதற்கும் இதே காலமே ஆகின்றது. இங்கு நாளும் ஆண்டும் ஒன்றே இக் காரணத்தால் இது கதிரவனுக்கு ஒரு முகத்தையே காட்டிக்கொண்டு ஓடி வருகின்றது. எனவே, புதனில் ஒரு பாதி என்றும் பகல்; மற்றொரு பாதி என்றும் இரவு! கதிரவனை நோக்கியுள்ள பகுதியில் எப்பொழுதும் வெப் பம் தாக்கிக்கொண்டிருப்பதால், அங்குக் கல்ை வீககின் றது; அவ்வெப்பத்தின் அவுை 77°F வரை உயரக் கூடும். கதிரவனுக்கு எதிர்ப்புறத்திலுள்ள பகுதியில் ஒரே இருளாக இருத்தலின் அப்பகுதியில் அளப்பருங் குளிர் வாட்டுகின்றது. பகலவனுக்கும் புதனுக்கும் இடையிலுள்ள தொலைவு மிகவும் குறைந்தும் வருவத கால், அதன் மேற்பரப்பின் வெப்பநிலையும் உயர்ந்தும் தாழ்ந்தும் இருக்கும். இது கதிரவனுக்கு அணித்தாக இருக்கும்பொழுது 4:0°F வெப்பத்தையும், சேய்மையி ஆள்ளபொழுது 280°F வெப்பத்தையும் கொண்டுள் னது. கதிரவ கணத்தில் மிகவும் வெப்பமான கோள் புதன் ஒன்றேயாகும். . புதனில் காற்று மண்டலம் இல்லை. இது தோன்றின காலத்தில் இதில் காற்று மண்டலம் இருப்பினும், இதன் மேற்பரப்பிலுள்ள அதிவெப்ப நிலையின் விளைவாக அது வெளியேறி இருத்தல் கூடும். மேலும், காற்று மண்டலத்தை சர்த்து நிலைநிறுத்தக்கூடிய எடையும் புதனுக்கு இல்லை. நீரும் அங்கு இல்லை. ஆகவே, நம் பூமியில் உள்ள உயிர் களைப் போல் அங்கு எதுவும் உயிர் வாழமுடியாது. திங்களுக்கும் புத்துக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன.