பக்கம்:அறிவியல் விருந்து.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அர.சு. நாராயணசாமி நாயுடு அவர்கள் (முதல்வர், ஜி. வேங்கடசாமி தாயுடு கல்லூரி, கோவில்பட்டி} மனமுவந்து அளித்த அணிந்துரை அறிவியலிலும் ஆசிரியவியலிலும் இலக்கிய ஆராய்ச் சியிலும் திறனாய்வுக் கலையிலும் மூழ்கித் திளைத்துக் கொழித்தெடுத்த முத்துகளை நன்னூல்களாக நல்ல தமிழில் நல்குகிறார் பேராசிரியர் ந. சுப்பு செட்டியார். பிறரையும் அந்நூல்களின் வாயிலாக அத்துறைகளில் மூழ்கி அறிவொளி பெறச் செய்கின்ற இந்நூற்றொண்டு வாழ்வதாக. 'அறிவியல் விருந்து என்னும் இந்நூலினை யணுவின் கூறுகளாகிய அரிசி, அணுவின் ஆற்றலாகிய மிளகு, குடி வழியும் சூழ்நிலையும் என்னும் புளி ஈருள்ளி, மின்னலும் இடியும் என்னும் பச்சை மிளகாய், ஞாயிற்றுக் குடும்பம் என்னும் காய்கறிகள் அம்புலிப் பயணம் என்னும் மஞ்சட் பொடி, கதிரியக்க ஓரிடத்தான்கள் என்னும் தாளி தப் பொருள். இவற்றை வளவறிந்து பொழுதஹிந்து சேர்த்தாக்கித் தொல்பொருட் கலையில் புதிய ஆராய்ச்சி முறையென்னும் நெய்யிலேயிட்டு நளவிலியுளமாகிய மசாலப் பொருள் சேர்த்து எதிர்காலத்தில் அறிவியல் என்னும் ஊறுகாயோடு சுவைத்துண்டு மகிழ்ச்சி யேப்ப மிடச் செய்துள்ளார். இவ்வறிஞர். அறிவுக்குச் சத் தாட்டும் நல்லுணவிது. பழமையையும், புதுமையையும் கலந்து மாறுபாடில்லா வுண்டி நல்கியுள்ளார்.