பக்கம்:அறிவியல் விருந்து.pdf/71

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞாயிற்றுக் குடும்பம் §3 வெளியேறுவதில்லை யாதலின் வெப்பம் வெளிவராமல் வெள்ளியின் மேற்பரப்பிலேயே தங்கிவிடுகின்றது. இங்கு வெப்பம் 212°F அளவு உள்ளது; இது நீரின் கொதிநிலை பாகும். வெள்ளியில் மாபெருங் கடல்களும் சதுப்பு நிலங்களும் நிறைந்திருக்கலாம் என ஊகிக் கின்றனர். பூமியைத் திங்கள் சுற்றியோடுவதுபோல் புதனையும் வெள்ளியையும் சுற்றியோடும் துணைக்கோன் ஒன்றும் இல்லை. பூமிக்கு உள்ளாக நிற்கும் இந்த இரண்டு கோன் அளும் கீழ்க்கோன்கள்' என்றும் வழங்கப்பெறும். 3. பூமி நாம் வசிக்கும் நிலவுலகும் (பூமியும்) ஞாயிற்று மண்டலத்தைச் சேர்ந்த ஒரு கோளாகும். கதிரவனைப் பற்றிய ஆராய்ச்சிக்கும், மற்ற அண்டங்களை ஆராய்ந்தறி வதற்கும் இந்நிலவுலகமே அடிப்படை யாக அமைந்துள்ளது. இதில் வாழும் "சில்வாழ் பல்பிணிச் சிற்றறிவுடைய' மனிதனே இவற்றை ஆய்ந்து பல மெய்ம்மைகளைப் புலப் படுத்தியுள்ளான். மேலும், இவன் வானக் காட்சிகளைக் கண்டு களித்து பல கவிதைகளைப் படைத்துள்ளான். ஞாயிறு, திங்கள் இவற்றின் காலைத் தோற்றங்களையும் மாலை மறைவுகளையும் பற்றிய கவிதைகள் எல்லா மொழி களிலும் உள்ளன; இவை இம்மொழியினருக்கு இன்பமூட்டி வருகின்றன. பூமிசூரியனிலிருந்து 92,700,000 கல்தொலைவிலுள்ளது. பூமி மு ற் றி லு ம் உருண்டை வடிவுடையதன்று. வட துருவத்திலும் தென் துருவத்திலும் இது சிறிது தட்டை யாய்க் குழிந்துள்ளது. பூமியின் சுற்றளவு சுமார் 25 ஆயிரம் மைல் என்று கணித நூலார் கணித்துள்ளனர். இதன் 26. ÉpéGärsitäcir-Inferior planets. 27. Loud-Earth.