பக்கம்:அறிவியல் விருந்து.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞாயிற்றுக் குடும்பம் 尊 என்ற அமெரிக்க விண் வெளிக்கலத்தின் மூலம் அம்புலியை எட்டிவிட்டனர். இதனைத் தொடர்ந்து பல அப்போலோக் கள் அம்புலிக்குச் சென்று வந்து விட்டன. பூமி தோன்றின காலத்திலேயே திங்களும் தோன்றி அதற்குத் துணையாக இருந்து வருகின்றது. திங்கள் இந் திலவுலகிலிருந்து 2,3800 கல் தொலைவிலுள்ளது. இதன் குறுக்களவு 2163 மைல். இதனுடைய மேற்பரப்பு பூமியின் மேற்பரப்பில் பதினான்கில் ஒரு பங்கே உன்னது: எடையோ பூமியின் எடையில் எண்பத்திரண்டில் ஒரு பங்காகும். வான்மதி பூமியின் கவர்ச்சியில் ஆறில் ஒரு பங்கு தான் உள்ளது. பூமியில் 90 பவுண்டு எடையுள்ள ஒரு சிறுவன் மதிமண்டலத்தில் 15 பவுண்டு தான் இருப்பான். இங்கு ஆறடி உயரம் தாண்டக்கூடியவன் அங்கு 36 அடி உயரம் தாண்டுவான், திங்கள் குறைந்த கவர்ச்சியைக் கொண்டிருப்பினும், இது பூமியைப் பல விதங்களில் பாதிக்கின்றது. கடல்களில் தோன்றும் கொந்தளிப்பு:சட் கெல்லாம் காரணம் மதியின் கவர்ச்சியே யாகும். குறைந்த கவர்ச்சியையுடையதாயிருப்பதால் மதிமண்டலத்தில்காற்று ண்ைடலம் இல்லை; முகிற் கூட்டங்களும் இல்லை; நீரும் இல்லை. திங்கள் பகலவனை மணிக்கு 2300 மைல் வேகத்தில் சுற்றி வருகின்றது. இது பூமியைச் சுற்றி வரும் வழியும் முழுவட்டமன்று. ஆதலின், ஒரு சமயம் இது கதிரவனுக்கு அண்மையிலும் பிறிதொரு சமயம் அதற்குத் தொலைவிலும் இருக்கும், நமக்கு மிக அண்மையில் வருங்கால் இதன் தொலைவு 2,21,000 மைல்; சேய்மையில் செல்லுங்கால்இதன் தொலைவு 2,53,000 மைல்கள் ஆகும். இது பூமியைச்சுற்றுங் கால் மேற்கிலிருந்து கிழக்காகச் சுற்றுவதுடன் பூமியுடன் ஆண்டிற்கொரு முறை பகலவனையும் வலம் வருகின்றது. இது பூமியை ஒரு முறை சுற்றி வருவதற்கு 29 நாட்கள், 12 மணி, 44 மணித்துளி, 2.8 விநாடி காலம் ஆகின்றது. இது