§§ அறிவியல் விருந்து 150 பவுண்டு எடையுள்ள ஒரு மனிதன் செவ்வாயின்மேல் 50 பவுண்டு எடையுள்ளவனாக இருப்பான். பூமியின் மீது 5 அடி உயரம் தாண்டும் ஒருவன் செவ்வாயின் மீது 15 அடி உயரம் தாண்டுவான் செவ்வாய்க்கும் பூமிக்கும் உள்ள சராசரித் தொலைவு 14 கோடியே 15 இலட்சம் மைல். இது பூமிக்கு அண்மையிலிருக்கும்பொழுது இதன் துரசம் மூன்று கோடியே ஐம்பது இலட்சம் மைல்; எதிர்ப்பக்கத்திலிருக் கும்பொழுது இதன் தூரம் 23 கோடியே 40 இலட்சம் மைல் ஆகும். இது நம் பூமிக்கருகில் 15 அல்லது 17 ஆண்டுகட்கு ஒருமுறை வருகின்றது. அப்போது செவ் வாய்க்கும் பகலவனுக்கும் இடையில் பூமி நிற்கின்றது. இந்நிலை செவ்வாயைப்பற்றிய ஆராய்ச்சிக்கு மிகவும் ஏற்றதாகும், செவ்வாய் உலகில் காற்று மண்டலம் வெள்ளியிலிருப்பதுபோல் அவ்வளவு அடர்த்தியாக இல்லை. காற்று மண்டலத்தினுாடு இதன் மேற்பரப்பைத் தெளிவாக நோக்கக்கூடுமாதலின் இது தன்னைச் சுற்றி வரும் நேரம் 24 மணி 37 மணித்துளி 22.5 விநாடிகள் சனக் கணிக்கப்பெற்றுள்ளது. இதுவே அங்கு ஒரு நாளாகும். இக்கோள் பகலவனை ஒருமுறை சுற்றிவருவதற்கு 637 நாட்களாகின்றன. செவ்வாய் பகலவனைச் சுற்றிவரும் மண்டலத்தின் தளம் இதன் சுழற்சி இருசுக்கு நேர்க்குத்தாக இல்லை, இது 24° சாய்ந்துள்ளது. இக்காரணத்தால் பூமியிலுள்ளதைப்போல் செவ்வாயிலும் பருவகாலங்கள் ஏற்படுகின்றன. செவ்வாயின் மேற்பரப்பின் தோற்றம் தெளிவாக உள் ளது. இதன் உடல் முழுவதும் கருங்கோடுகள் எக் காலத்திலும் மறையாமல் தோன்றுகின்றன. இதன் சுழற்சி இருசின் இரு முனைகளிலும் வெண்ணிறப் படை கள் காணப்பெறுகின்றன. இவ் வெண்ணிறப் பகுதிகள் மாரிகாலத்தில் பெரியனவாகவும், வேனிற்காலத்தில் இறியனவாகவும் தென்படுகின்றன. செல்வாயில் பச்சை
பக்கம்:அறிவியல் விருந்து.pdf/78
Appearance