பக்கம்:அறிவியல் விருந்து.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞாயிற்றுக் குடும்பம் §3. யாவும் பெரும்பாலும், கிரேக்கப் போர்வீரர்களின் பெயர்களாகவே திகழ்கின்றன. இந்தச் சிறு கோள் களுள் மிகப் பெரியது சீரீஸ்' என்பது; சிவிலித் தீவின் காவற்கடவுளின் நினைவாக இடப்பட்ட பெயர் இது. இக்கோளின் குறுக்களவு 435 கல்லாகும். இக்கோள் களுள் மிகச் சிறியது அமர்” என்பது. இதன் விட்டம் இரண்டே மைல், தொலைநோக்கியில் இதனைப் பார்ப் பது எட்டுமைல் தொலைவிலுள்ள 50 காசு நாணயத்தைக் காண்பதை ஒத்துள்ளது என்று அறிவியலறிஞர்கள் கூறுவர். ஏனைய கோள்களின் குறுக்குத் தொலைவுகள் இவ் விரண்டு கோன்களின் விட்டங்களுக்கிடையில் அமைந்துள் ளன. இச்சிறு கோள்கள் பல்வேறு வட்டங்களில் அமைந் துள்ள மண்டலங்களில் சுற்றி வந்துகொண்டுள்ளன. ஈரோஸ்' என்னும் ஒரு சிறுகோள் தன் அயனப் பாதை யில் ஒடி வருங்கால் சில சமயம் பூமிககு ஒருகோடியே 40 இலட்சம் மைல் வரை வருகின்றது; அமர் என்னும் கோள் ஒருகோடி மைல் தூரம் வரை பூமிக்கு அருகில் வருகின்றது. இச் சிறு கோள்களில் காற்று மண்டலமோ நீராவியோ இருப்பதாகத் தெரியவில்லை. இவை யாவும் பல்வேறு ஒழுங்கற்ற கோணல் வடிவங்களாகத் தோன்றுகின்றன, இவை பகலவனைச் சுற்றியோடும் வழிகளும் வட்டமாக இராமல், கோணலாக, நீண்டு கிடக்கின்றன. இச்சிறு கோள்களின் தோற்றத்திற்குப் பல காரணங்கள் கூறப்பெறுகின்றன. ஒரு காலத்தில் செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையில் ஒரு பெருங்கோள் இருந்திருக் கலாம் என்றும், யாதோ ஒரு காரணத்தால் அது வெடித்துப் பல்லாயிரம் துண்டுகளாகச் சிதறுண்டிருக்கலாம் என்றும் 38, #ffeo-Ceres. 39. 3.,Lost-Amor. 40. ஈரோஸ் : Eros. அ-ல்