பக்கம்:அறிவியல் விருந்து.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

క్షీ அறிவியல் விருந்து ஒருசாரார் கருதுகின்றனர். கோள்கள் பிறப்பதற்கு முன்பு ஒரு வாயுப்படலம் கதிரவனினின்றும் அருகிற் சென்ற ஒரு விண்மீனினால் நீளமாக இழுக்கப்பட்டதென்றும், இது தான் கோள்களின் தோற்றத்திற்கு வேண்டிய சத்துப் பொருளை அளித்ததென்றும், செவ்வாயும் வியாழனும் தோன்றி ைபிறகு இவற்றின் நடுவில் எஞ்சியிருந்த வாயுப் படலம் வியாழனுடைய பெரிய கவர்ச்சியால் பாதிக்கப் பட்டுப் பெருங்கோளமாகத் திரளவியலாமல் துண்டு துண்டான கற்பாறைகளாக இறுகிவிட்டது என்றும் பிறிதொரு சாரார் கருதுகின்றனர். இவற்றுள் இரண்டாவது கருத்தே பொருத்தமுடையதாகத் தோன்றுகின்றது. [6] வெளிநிலைக் கோள்கள் 6, வியாழன் செவ்வாய்க்கு அடுத்து குரிய மண்டலத்தின் ஆறாம் பிராகாரத்தில் அழகாய் விளங்குவது வியாழன்" என்ற கோளாகும். இதற்குப் பொன், குரு, தேவகுரு பிரகஸ்பதி, இராஜா என்றும் வேறு பெயர்கள் உள்ளன. பகலவன் மணடலத்தில் கதிரவனுக்கு அடுத்தபடியாக உருவத்தில் பேரியது இக் கோளாகும். வெள்ளியைத் தவிர ஏனைய கோள்கள் எல்லாவற்றிலும் இதுவே மிகுந்த ஒளியுள்ளது. வெள்ளிக்குச் சுமமான பேரழகுடனும் ஒளியுடனும் நம் கண்ணைக் கவர்ந்து ஒரு தங்க விளக்குபோல் வானத்தை அணிசெய்வது இக்கோள் ஒன்றேயாகும். தொலைநோக்கி யில் பார்க்கப்படுங்கால் இதன் வனப்பு கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது. இக்கோளின் மேற்பகுதி மாற்றறி யாத பசும்பொன் போலத் தோன்றுவதால் நம்மவர்கள் இதற்குப் பொன்னன் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர். 41. ®*um gér - Jupiter,