பக்கம்:அறிவியல் விருந்து.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞாயிற்றுக் குடும்பம் 95 வியாழனுக்கும் கதிரவனுக்கும் இடையிலுள்ள சராசரித் தொலைவு 48 கோடியே 33 இலட்சம் மைல்; அஃதாவது, சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள தொலைவைப் போன்று ஐந்து மடங்கு அதிகம் இது. இது பூமிக்கு அண்மையிலிருக் குங்கால் 36 கோடியே 70 இலட்சம் மைல் தொலைவிலும் சேய்மையிலிருக்குங்கால் 60 கோடி மைல் தொலைவிலும் உள்ளது. நடுக்கோட்டருகில் வியாழனின் குறுக்களவு 88, 700 மைல்; துருவத்திற்கு துருவம் 82, 900 மைல் ஆகும். இதன் மேற்பரப்பு பூமியின் மேற்பரப்பைவிட பதினொரு மடங்கு பெரியது. பரிமாணத்தில் இது பூமியைவிட 1400 மடங்குக்கு அதிகமாகவே உள்ளது; இதன் எடையோ பூமியின் எடையைவிட 315 மடங்கு அதிகமானது. இதன் திண்மை நீரின் திண்மையைவிட ஒன்றேகால் பங்கு அதிகம். இது பூமியின் திண்மையில் கால் பங்குக.ட இல்லை. எனினும்,இதன்மேற்பரப்பில் பூமியின்மேற்பரப்பிலுள்ளதை விடப் பொருட்கவர்ச்சியின் விசை இரண்டரை மடங்கு அதிகம் உள்ளது. பூமியின் மீது 150 பவுண்டு எடையுள்ள மனிதனின் எடை வியாழனில் சுமார் நானுாறு பவுண்டு இருக்கும். பூமியின் திண்மை வியாழனுக்கு இருந்திருக்கு மாயின் அங்கு இம் மனிதனின் எடை ஆயிரத்து ஐந்நூறு பவுண்டு இருத்தல் வேண்டும். இக் கோள் ஒன்பது மணி ஐம்பது மணித்துளிகளில் தன்னைத்தானே சுற்றிக் கொள்கிளுன்றது; சூரியனைப் பன்னிரெண்டு ஆண்டுகட் கொரு முறை சுற்றி வருகின்றது. பூமி தன் சுந்துப் பயணத்தில் இக்கோளைப் பன்னிரண்டு ஆண்டுகளில் பன்னிரண்டு தடவைகள் சந்திக்கின்றது. இக்கோளிலும் 'வுக்கரித்தலைக் காண்கின்றோம். இக்கோளின் மேற்பரப்பின் மீது காற்று மண்டலம் கவிந்திருக்க வேண்டும் என்று தெரியவருகின்றது. இக் காற்று மண்டலத்தின் அடியில் நீரும் உறைபனியும் அமைத்