பக்கம்:அறிவியல் விருந்து.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 அறிவியல் விருந்து திருக்க வேண்டுமென்றும் கருதுகின்றனர். இக்கோளின் மேற்பரப்பின் வெப்பநிலை சராசரி -130°C வரை இருக் கலாம் என்று தெரிகின்றது. இதன் மேற்பரப்பில் பட்டை பட்டையாகத் தோன்றுபவை முகிற்கூட்டங்களாக இருக்க லாம் என்றும், இவை கடும் புயற்காற்றினால் அடித்துச் செல்லப்படுவதால் இங்ஙனம் தோற்றமளிக்கின்றன என்றும் கருதுகின்றனர். நிறமாலைமாணிமூலம் இதன் காற்று மண்டலத்தைச் சோதித்ததில் இதில் அம்மோனியா வாயுவும், மீதேன் வாயுவும் இருத்தல் வேண்டுமென்பது உறுதிப்பட்டது. இவை இரண்டும் நச்சு வாயுக்களாதலின் இங்கு யாதொரு உயிர்வாழ்க்கையும் நடைபெறுவதற்கு வாய்ப்பு இல்லை. பகலவனின் மேற்பரப்பில் தோன்றுவது போலவே வியாழனின் மேற்பரப்பிலும் புள்ளிகள் தோன்றுகின்றன. இவை கருமையாகவும் உள்ளன; வெண்மையாகவும் உள்ளன. இப்புள்ளிகள் நீண்டநேரம் தோன்றுவதுமில்லை. இவற்றுள் சில புள்ளிகன் சில திங்கள்கள்வரை நீடித்திருப் பதும் தெரிந்தது. கதிரவனின் பண்புகள் வியாழனிலும் தோன்றுவதால், இதன் திடப்பகுதியை இன்னும் காண வில்லை என்றும், இதன் காற்று மண்டலத்தையே பார்க் கின்றோம் என்றும் கருதுகின்றனர். வியாழனைச் சுற்றி ஒன்பது துணைக்கோள்கள் ஓடி வந்துகொண்டுள்ளன. முதன் முதலாக கவிலியோ என்பார் 16:-ெஇல் தம்முடைய தொலைநோக்கியின் மூலம் நான்கு துணைக்கோள்களையே கண்டார். இவை நான்கும் நமது திங்களைப்போலவே எப்பொழுதும் ஒரு முகத்தையே வியாழனுக்குக் காட்டிக்கொண்டுள்ளன, இவற்றுள் இரண்டு நமது அம்புவியின் குறுக்களவினைப் பெற்றுள்ளன. ஒன்றன் குறுக்களவு 1960 மைல்; மற்.