பக்கம்:அறிவியல் விருந்து.pdf/85

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞாயிற்றுக் குடும்பம் 97 றொன்றின் குறுக்களவு 2320 மைல். இன்னும் இரண்டு அம்புலிகள் புதனைப்போல் பருமனுள்ளவை. இவை ஒவ்வொன்றும் 3200 மைல் குறுக்களவுடையவை. ஏனைய ஐந்தும் மிகச் சிறியவை. எட்டாவது, ஒன்பதாவது துணைக்கோள்கள் ஏனையவற்றிற்கு நேர் எதிர்ப்புறத்தில் சுற்றுகின்றன. வியாழனைச் சுற்றும் நான்கு பெரிய துணைக்கோள்களும் விரைவாக இடம் மாறுகின்றன. ஒரு நாள் இவை வியாழனுக்கு ஒரு பக்கத்திலும், மற்றொரு நாள் இவை மற்றொரு பக்கத்திலும், இன்னும் சில நாட் களில் ஒரு பக்கத்தில் சிலவும், பிறிதொரு பக்கத்தில் ஏனையவுமாகக் காணப்பெறும், வியாழனைச் சுற்றும் துணைக்கோள்கள் எண்ணிக்கை யிலும், உருவங்களிலும், பருமனிலும் சலனங்களிலும் ஒன்றுக் கொன்று வேறுபடுவதால், இவற்றின் பிறப்பை தமது திங்களின் பிறப்புடன் ஒப்பிடுவதற்கில்லை. வியாழனின் துணைக் கோள்கள் சில நமது சந்திரனைப்போல் தோன்றி யிருக்கலாம். ஆயினும், ஏனையவை வியாழனுக்கும் செவ்வாய்க்கும் இடையில் சுற்றிக் கொண்டிருக்கும் சிறு கோளத் திரள்களைச் சார்ந்திருந்து, பிறகு வியாழனின் கவர்ச்சி வலைக்குட்பட்டு அதனால் சிறையீடு செய்யப் பட்டிருத்தல் வேண்டும். குருவில் நாள்தோறும் சூரிய கிரணங்களும் தன் துணைக்கோள்களினால் ஏற்படும் கிரகணங்களும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இவற்றின் துணையால் ஒளியின் வேகம் உறுதி செய்யப்பெற்றது. வியாழனில் தோன்றும் புள்ளிகளையும், அதன் துணைக் கோள்களையும் நோக்க, வியாழக் குடும்பம் சூரிய குடும்பத்துடன் ஒற்றுமை கொண்டுள்ளது. .ே சனி பகலவன் மண்டலத்தில் குருவுக்கு அப்பால் ஏழாம் பிராகாரத்தில் ஓடி வந்துகொண்டிருக்கும் கோள் சனி