பக்கம்:அறிவியல் விருந்து.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞாயிற்றுக் குடும்பம் 99 850 மடங்கு அதிகமாகும். இது நிற்க, இதிலுள்ள பொருள் கள் நீரைவிட இலேசானவை, நீரின் கனம் நூறு என்றால் இவற்றின் கனம் 30 எனலாம். இவை மரப்பட்டைபோல் இலேசானவை. இதனை ஒரு பெருங்கடலின் மீது வைத் தால் இது மிதக்கும்.! பலவகையால் நோக்குமிடத்து, இது வியாழனோடும் ஒத்துள்ளது. இவ்விரு கோள்களும் மிகப் பெரியவை. இரண்டன் துருவங்களும் தட்டையானன்ை இவை இரண்டும் தம்மைத் தாமே அதிவேகமாகச் சுற்றிக் கொள்பவை. இவை இரண்டற்கும் மட்டிலுமே பல துணைக் கோள்கள் உள்ளன. இவை இரண்டு மட்டிலுமே வால்மீன்களைப்* பெற்றுள்ளன. எந்தக் கோளத்திலும் காணாத ஒரு புதுமை இக் கோளில் காணப்பெறுகின்றது. தொலைநோக்கியால் இகனைக் காணுங்கால், இது தனித்தி ராமல் ஒரு வளையத் தினுள்ளே வீற்றிருப்பதைக் காண்கின்றோம். இவ்வளையம் வட்டமாயிராமல்முட்டைவடிவமாசஉள்ளது.இதட்டையான மூன்று வளையங்கள் ஒன்றன்மேல் ஒன்றாக இருப்பதாக இப்பொழுது உறுதிப்படுத்தியுள்ளனர். தொலைநோக்கி மூலம் நோக்கினால் முதலில் ஒளியுள்ள வளையங்கள் தோன்றுகின்றன. உள் வளையம் வெளி வளையத்தைவிட அதிக ஒளியுடன் திகழ்கின்றது. இவ்வுள் வளையத் தினுள்ளே மூன்றாவது வளையம் பேரழகுடன் காணப்பெறு கின்றது. இவற்றின் குறுக்களவு 170,000 கல்லாகும்; இவற்றின் கனம் 50மைல். இதன் நடுவில் இடைவெளிகள் உள்ளன. சனிக் கோளுக்கும் இவ்வளையத்திற்கும் இடையே பத்தாயிரம் கல் தூரம் வெட்ட வெளியாக உள்ளது. 43. autrdbuổsir - Comets