இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
7 தமிழ்நடை மிக நன்றாயமைந்துள்ளது. எத்தகைய அறிவிய லுண்மைகளையுங் கூறுவதற்குத் தமிழ்மொழி வளையும் வளமுடை தென்பதைத் தெளியும்படி யிவர் தமிழ் இயைந்துள்ளது. இத்தகு முயற்சியில் ஈடுபடும் புலவர்கட்கு இவர் நடை ஒரு நல்ல வழிகாட்டியாகும். தமிழ்கூறு நல்லுலகம் இவர்தம் நற்பணியைப் பாராட்டி நன்றியறிதலைக் காட்டுவதாக, தெவிட்டாத இவ்விருந் தினை யருந்தி மேலும் அருந்த விழைவதாக. தமிழறிவை வளர்த்து மகிழ்விக்கும் அறிவுத் திருப் பணியில் மேலும் மேலும் ஊக்கங் கொள்ளவும், நீடிய ஆயுளும் கூடிய வாய்ப்புகளும் பெறவும் இறைவன் திருவேங்கடவன் இப் பேராசிரியருக்கு இன்னருள் சுரப்பானாக. . . . . . ஜி. வேங்கடசாமி நாயுடு கல்லூரி, அர. சு. நாராயணசாமீ கோவில்பட்டி, 27-4-67.