பக்கம்:அறிவியல் விருந்து.pdf/90

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#32 அறிவியல் விருந்து பூமியை விட ஐம்பத்தெட்டு மடங்கு அதிகமான பருமனைக் கொண்டுள்ளது; இதன் நிறையோ பூமியின் நிறையை விட பதினான்கு மடங்கு அதிகமானது. எனவே, இதன் திண்மை நீரின் திண்மையைவிட ஒன்றேகால் மடங்கு அதிகம் உள்ளது. இது பகலவனை ஒருமுறை வலம் வருவதற்கு 84 ஆண்டுகள் ஆகின்றன. 10 மணி 48 மணித்துளிகளில் இது தன்னையே ஒருமுறை சுற்றிவிடுகின்றது. பூமிக்குக் கிடைக்கும் சூரிய ஒளியில் 360-இல் ஒரு பங்கே இதில் சென்று பாய்கின்றது. எனவே, இங்குக் கதிரவன் வெப்பத்தைத் தராது ஒளியைமட்டிலுமே தருகின்றான். மிகத் தடிப்பான வெண்மேகப் போர்வையினால் இது கவித்துள்ளது. இதன் மேற்பரப்பின் வெப்பநிலை -190°C இருக்கவேண்டும் என்று ஊகிக்கின்றனர். இதற்கு ஏரியல், அம்பிரியல், டைட்டானியா, ஒபெரான் என்ற நான்கு துணைக்கோள்கள் உள்ளன. இவை தொலைப் பார்வையில் சிறு புள்ளிகளைப் போலவே தோன்றுகின்றன. இவை இக்கோளைக் கிழக்கிலிருந்து மேற்குமுகமாகச் சுற்று கின்றன. 9. நெப்டியூன் (வருணன்) யுரேனஸுக்கு அப்பால் பகலவன் மண்டலத்தில் சுழன்று வருவது நெப்டியூன்” என்ற கோள் ஆகும். இதனைக் கண்டறிந்த வரலாறு நியூட்டனின் பொருட் கவர்ச்சி ஆற்றல் விதிக்கு ஒரு வெற்றியாகும். யுரேனஸ் கண்டறியப் பெற்ற பிறகு இதனை ஆண்டுதோறும் கவனித்து இதனுடைய நிலைகளையும் பெயர்ச்சிகளையும் கணித்த வான நூற் கலைஞர்கள் இது குறித்த காலத்தில் குறித்த 56. நெப்டியூன்-Neptune,