பக்கம்:அறிவியல் விருந்து.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞாயிற்றுக் குடும்பம் 鬣 யிருப்பதால் புதியன காணப்படுதல் இயல்பேயாகும். இக் கதிரவ கணத்திலுள்ள கோள்களில் ஒன்றற்கொன்றுள்ள அளவின் வேற்றுமையையும் தொலைவின் வேற்றுமையை யும் நமது மனத்தில் படியுமாறு இவ்வாறு விளக்கி வைப்பார் ஹெர்ஷல் என்ற அறிஞர்: இரண்டடி சுற்றள வுள்ள ஒரு பந்தினை நடுவேயுள்ள சூரியனாகக் கொண் டால், இதற்கு 154 அடி தொலைவில் வைத்த கடுகே புதன்; 214 அடி தொலைவில் வைத்த பட்டாணியே வெள்ளி; 430 அடி தொலைவில் வைத்த மற்றொரு பட்டா னியே பூமி, 654 அடி தொலைவில் உள்ள ஒரு குண்டுசியின் தலையே செவ்வாய்; 1100 அடி தொலைவிலுள்ள 30 சிறிய மணல்களே நமக்குக் கட்புலனாகும் சிறுகோளத் திரள்கள்; அரை மைல் தொலைவிலுள்ள நடுத்தரமான கிச்சிலிப் பழமே வியாழன்; 415 மைல் தொலைவிலுள்ள பெரிய கிச்சிலிப்பழமே சனி, ஒன்றரை மைல் தொலைவிலுள்ள ஒரு கொட்டைப் பாக்கே யுரேனஸ், இரண்டரை கல் தொலைவில் வைக்கப்பெற்ற பெரியதொரு கொட்டைப் பாக்கே நெப்டியூன். {7 வால்மீன்களும் எரிமீன்களும் கதிரவன் மண்டலத்தில் கோள்கள், சிறு கோள் திரள்கள் இவற்றைத் தவிர வால் மீன்கள்,' எரிமீன்கள்" என்பவையும் உலவி வருகின்றன. இவற்றைப் பற்றியும் சிறிது அறிந்துகொள்வோம். 59, surrousso; gir-Comets. 6{}. Griflifforso-Meteors.