பக்கம்:அறிவியல் விருந்து.pdf/94

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

義部 அறிவியல் விருந்து 3. வால் மீன்கள் வால்மீன்கள் தூய கேதுக்கள் என்றும், புகைக் கொடி என்றும் இலக்கியங்களில் வழங்கப்பெறுகின்றன. எல்லா நாட்டினர்கனாலும் இவை கொடிய உற்பாதங்களாகக் கொள்ளப்பெறுகின்றன. கொடும் போர்கள், வற்கடங்கள், கோள்னை நோய்கள் முதலிய கோர விபத்துக்கள் நேரிடுவதற்கு முன்னர் அவற்றின் துதர்களாக வால் மீன்கள் தோன்றுவனவாக மக்களிடையே இன்னும் ஓர் எண்ணம் இருந்துவருகின்றது. வால்மீன்கள் பூமியைப்போலவே சூரியனைச் சுற்றி வருவன; இவை பூமியினும் பெரிய வானப்பொருள்களாகும். பார்வைக்கு ஒழுங்கான உருண்டைகளாக இராமல் இவை பெரிய முகிற்றலைகளும் இலட்சக் கணக்கு மைல் நீளமான வால்களும் உடையன. வால் மீன்கட்கு நீண்ட வால்கள் இருத்தலின் இவை அப் பெயர் பெற்றன. இவை வானத்தில் தோன்றுங்கால் தாம் காண்பது ஓர் ஒப்பற்ற அதிசயக் காட்சியாகும். கீழ்வானத்தில் ஒரு மீன் தோன்றுவதும், அதனினின்றும் புறப்பட்ட ஒரு வால் நீண்டு, விரிந்து, வளைத் து, உச்சிவானம் வரையிலும் பரவியிருத்தலும், அதன்மூலம் விண்மீன்கள் மறைவுபடாமல் பளிச்சென்று மின்னுவதும் வானவிந்தைகளில் ஒன்றன்றோ? ஆயிரக் கணக்கான வால்மீன்கனில் பல கதிரவன் மண்டலத்தைச் சார்ந்தவை. நம் பூமண்டலத்தைச் சார்ந்தவைகளும் உள்ளன. பகலவனுக்கும் நெப்டியூனுக்கும் இடையிலுள்ள தொலைவைவிட இருபது மடங்கு அதிகமான தொலைவில் வால்மீன்கள் சுற்றுகின்றன. எனவே, பகலவன் மண்டலம் படைக்கப்பெறுவதற்குக் காரணமாயிருந்த மூலப்பொருள் இவ்வளவு தொலைவு ஆதியில் பரவியிருந்திருக்கவேண்டு மென்பது பெறப்படுகின்றது.