ஞாயிற்றுக் குடும்பம் #07 வால்மீன் ஒன்று ஒளிமயமான நீண்ட வெண்மேகம் போல் காட்சி அளிக்கும். இதன் ஒளிமிக்க பாகம் தலை எனப்படும். இதனைக் கரு' என்றும் வழங்குவர். இது திண்மையான ஒரு கோளமன்று; உடைபட்ட துகள் களும் மூலப்புழுதியும் இப்பகுதியில் நிறைந்துள்ளன. தலையைச் சுற்றிலும் ஒரு புகைப் படலம் காணப்பெறு கின்றது. இது வால்மீனின் படலம்' என்ற இரண்டாவது பகுதியாகும். இதுவே வால்மீனை ஒரு விண்மீனினின்றும் பிரித்தறியப் பயன்படுவது. வால்மீனின் மூன்றாவது பகுதி வால். வால்மீன்கள் கதிரவனுக்கு அருகில் வருங்கால் அவற்றின் தலையினின்றும் சூரிய ஒளியினால் ஒரு துண்டிை யான புழுதி கிளப்பப்பெற்று வானத்தில் நீண்டது.ாரம் வாலாகத் தோற்றம் அளிக்கின்றது. எல்லா வால்மீன் களும் தோற்றத்தில் ஒன்றுக்கொன்று சிறிது மாறுபடு கின்றன. சிலவற்றின் வால்கள் குறுகியும் தடித்தும், சிலவற்றின் வால்கள் நீண்டும் வளைந்தும் உள்ளன. சில மீன்களுக்குப் பல வால்களும் இருப்பதுண்டு, வால்களே இல்லாத வால்மீன்களும் உள்ளன. இவை ஒளி மிகுதி யினால் பகலிலும் கட்புலனாகும். சிலவற்றின் வாலின் நீளம் ஐம்பது இலட்சம் மைல் முதல் இருபது கோடி மைல் வரை இருக்கும்! வால்மீனின் வழி முட்டை வடிவமானதன்று; அது பேரண்ட வடிவமானது. கோள்களின் வழிகள் யாவும் கிட்டத்தட்ட ஒரே தளத்தில் உள்ளன; இவற்றின் பாதை கள் பல பரப்பில் உள்ளன. ஒரு வால்மீன் கதிரவனைச் சுற்றி வருங்கால் அதனுடைய வாலமைப்பில் பலவித 61. *@-Nucleus. 62. Li-auth-Coma. °3. Guysia- sula-Parabolic.
பக்கம்:அறிவியல் விருந்து.pdf/95
Appearance