பக்கம்:அறிவுக்கு உணவு.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
8
அறிவுக்கு உணவு
 


போற்றலும் தூற்றலும்

உயிரோடிருக்கும் பொழுது துாற்றிக்கொண்டிருந்து, இறந்த பிறகு போற்றிப் புகழ்கின்ற கொடுஞ்செயலை இந்தியாவிலேதான் அதிகமாகக் காணலாம்.

மூன்றும் அற்றவர்கள்

அறிவும், நேர்மையும், ஒழுக்கமும் உள்ள அறிஞர்கள் அனை வராலும் பாராட்டப்படுவார்கள் அவர்களைத் தூற்றுபவர்களோ, அம் மூன்றும் அற்றவர்களாய்க் காணப்படுவார்கள்.

வஞ்சகர் உள்ளம்

பாலைவனத்தில் பசும்புல்லைக் காணலாம்:
எங்கு? -சுனையருகில்! -

கோழைகளிடத்தில் வீரத்தைக்கூடக் காணலாம்.
எப்போது? -உரிமை பறிபோகும் போது

கார்காலத்து இருளில் வெளிச்சத்தைக் கூடக் காணலாம்.
எப்போது? -மின்னும் போது!

வஞ்சக மக்களின் உள்ளத்திலுள்ளதை மட்டும் எங்கும், எப்போதும், எவராலும் காண இயலாது.

எது இழிவு?

உழைக்காமல் உயிர் வாழ எண்ணித் தன்னைப் போன்ற மனிதன் ஒருவனிடம் மானமிழந்து கைநீட்டிப் பிச்சை கேட்பதுதான் இழிவு. இதைவிட இழிவு வேறு எதுவும் இல்லை என்பது ஒரு முடிவு.

இத்தகைய இழிவுக்கும் துணிந்து மானங்கெட்டுப் பிச்சை கேட்கின்ற ஒருவனிடம், “இல்லை” என்று கையை விரிப்பது அதைவிட இழிவு என்பது மற்றொரு முடிவு. உங்கள் முடிவு எது?

ஜோசியம்

ஜோசியர் : (தம் மாணவனைப் பார்த்து) தம்பி! நீ ஜாதகம் பார்க்கக் கற்றுக்கொண்டுவிட்டாயா?