பக்கம்:அறிவுக்கு உணவு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

அறிவுக்கு உணவு


அதையே மற்றவர்களுக்கும் சொல்லிக் கொடுத்தார்கள். அதன் பலனாகத்தான் தமிழ்நாடு இன்று இவ்வாறு காட்சியளிக்கிறது.

இனிச் சிறிது காலத்திற்காவது புலவர் பெருமக்கள் அதை மாற்றி “கற்று, உணர்த்து, கிளம்பு” என்று சொல்லிக் கொடுப்பது நல்லது.

குழந்தை அறிவு

குழந்தைகளை வளர்ப்பது பெரிதன்று; அவர்களது அறிவை வளர்ப்பதே அதைவிடப் பெரிது அல்லது தானே வளரும் அறிவையாவது தடைப்படுத்தாமலிருப்பது நல்லது.

“சோற்றை உருட்டாதே! உருட்டினால் தாய், தகப்பனை உருட்டிடுவாய்!” என்று சொல்லாதீர்கள்.

“சோற்றை உருட்டிக் கொண்டிராதே! விரைவில் சூட்டோடு சாப்பிடு! இன்றேல், செரிக்காது” எனச் சொல்லுங்கள்.

“சாப்பிடும் போது ஒரு விரலை நீட்டிக்கொண்டே சாப்பிடாதே. சாப்பிட்டால் குடும்பத்திற்கு ஆகாது.” எனச் சொல்லாதீர்கள்.

"சாப்பிடும்போது ஒரு விரலை நீட்டிக்கொண்டே சாப்பிட்டால், விரல் நகத்தால் கண்ணுக்கு ஆபத்து” என்று சொல்லுங்கள்.

“இரண்டு கழுதைகளுக்கு இடையில் போகாதே! போதல் சாஸ்திரத்துக்கு ஆகாது” எனச் சொல்லாதீர்கள்.

“இரண்டு கழுதைகளுக்கு இடையில் போகாதே! போனால் எந்தக் கழுதையாவது உதைக்கும்” எனச் சொல்லுங்கள்.

ஒன்றுபட்டால்

மனிதன் எதை எதையோ கற்றுக்கொண்டிருக்கிறான். ஆனால் சேர்ந்து வாழக் கற்றுக்கொள்ளவில்லை. மனிதனால் மிக அற்பமானது என்று கருதப்படுகின்ற தேங்காய் நார்த் துசியானது சேர்ந்து வாழக் கற்றுக்கொண்டு, பலதுாசுகள் சேர்ந்து இழைகளாகி, மூன்று இழை சேர்ந்து சிறு கயிறாகி, அது மூன்று சேர்ந்து பந்தற் கயிறாகி, அது மூன்றும் சேர்ந்து நீர் இறைக்கும்