பக்கம்:அறிவுக்கு உணவு.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கி.ஆ. பெ. விசுவநாதம்
31
 


மகிழ்ச்சியடை!

நீ உனக்கு உரியதைப் பிறருக்குக் கொடு! அவரடையும் மகிழ்ச்சியைப் பார்த்து நீ மகிழ்ச்சியடை! அது ஒன்றுதான் உனக்குப்புது இன்பத்தைத் தரக்கூடியது.


வருத்துவது

சாவு ஒருபோதும் மக்களை வருத்துவதில்லை. சாவைப் பற்றிய பயமே வருத்தக்கூடியது!


மாறுதல்

மனிதர் விலங்காக மாற ஆசைப்பட்டாலும் படலாம். ஆனால், அது நாயாக, நரியாக, கழுதையாக, குரங்காக மாறுவதாயிராமல், யானையாக மாறுவதாயிருக்க வேண்டும்.


அரை நாள்

அனுபவித்து அனுபவித்துப் புத்தி பெற அறுபது ஆண்டுகள் வேண்டும் அனுபவித்தவர்களிடம் புத்தி பெற அரை நாள் போதுமானது!


கடிதம்

நீ கோபம் வந்தபோது எழுதும் கடிதங்களை உடனே தபாலில் போட்டுவிடாதே! பெட்டியில் வை; மறுநாள் அதைப் படித்துப் பார். பிறகு அது தபாலுக்கு போயிற்றா, குப்பைத் தொட்டிக்குப் போயிற்றா என்பதை எனக்கு எழுது!


இறந்த காலம்

இறந்தகால நிகழ்ச்சிகளைப்பற்றிப் பேசவேண்டுமானால் எப்போதாவது பேசு! அதுவும், நாட்டை, மொழியை, சமூகத்தை, குடிப்பெருமையை முன் நிறுத்தியதாக இருக்கவேண்டும். உன்னை முன்நிறுத்தியதாக இருக்குமானால், ஒன்றுக்கும் பயன்படாமற் போய்விடும்!


வேறு

படிப்பு வேறு அறிவு வேறு என்பதை ஒப்புக்கொள்பவர்கள், படித்தவர்களின் அறிவு வேறு என்பதையும் ஒப்புக்கொள்ள