பக்கம்:அறிவுக்கு உணவு.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
33
அறிவுக்கு உணவு
 

வேண்டும். அறிவு வேறு, ஒழுக்கம் வேறு என்பதை ஒப்புக்கொள்ளுகிறார்கள். அறிவுடையவர்களின் ஒழுக்கம் வேறு என்பதையும் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும்.


நோயைத் தடுத்தல்

நோய் வராமல் தடுப்பவன் அறிஞன்;
வந்து தடுப்பவன் மனிதன்;
வந்தும் தடுக்காதவன் பிணம்.


அணிகலன்

மண்ணுக்கு அணிகலன் தென்னை; பெண்ணுக்கு அணிகலன் நாணம்; கண்ணுக்கு அணிகலன் இரக்கம்.


மதிப்பிடுதல்

முளையிலிருந்து விளைவை மதிப்பிடுதல் போல, செயலிலிருந் தும் விளைவை மதிப்பிடலாம்.


வலுவற்றவை

அடிப்படையின்மீது எழும்பாத சுவரும் அனுபவத்தின் மீது எழும்பாத ஆலோசனையும் வலுவற்றவை.


யோசியாமற் செய்

வாங்கிக் கொள்ளலாமா, வேண்டாவா என்று எண்ணும் நிலை வந்தபோது வாங்காதே! கொடுத்து விடலாமா, வேண்டாவா என்று எண்ணும் நிலை வந்து விட்டால் கொடுத்து விடு: உண்ணலாமா, வேண்டாவா என்று எண்ணும் நிலை வந்துவிட்டால், உண்ணாதே! இம்மூன்றும் யோசியாமல் செய்ய வேண்டிய முடிவுகளாம்.


நட்பு

மிக விரைவாக நண்பர்களைப் பெற்றுக் கொண்டே போகிறவன், அதிவிரைவாக நண்பர்களை இழந்து கொண்டே வருவான்.