பக்கம்:அறிவுக்கு உணவு.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
34
அறிவுக்கு உணவு
 


நேரம் இராது

நல்லதை எண்ணத் தீயவனுக்கும், தீயதை எண்ண நல்லவனுக்கும் நேரமே இராது.


அன்பு கெடும்

அளவுக்கு மீறி உணவுப்பொருள்களைத் தயாரித்து விருந்து செய்யும் அன்பர்களின் வீட்டிற்கு நீ அடிக்கடி போகாதே. போனால், அன்பு கெடும்.


அதிசயம்

கட்சிப் பற்றுக் காரணமாக நல்லவன் வெறுக்கப்படுவதும், தீயவன் போற்றப்படுவதும், அரசியல் உலகின் அதிசயமாகும்!


முயன்று பெறு

முயற்சியுள்ளவன் வெற்றி பெறுவான். உண்மையுள்ளவன் உயர்த்தப்பெறுவான். ஒழுக்கம் உள்ளவன் வாழ்த்தப்பெறுவான். ஆகவே, நீ இம்மூன்றையும் முயன்று பெறு.


பார்த்து நட

“இந்நூலைப் படித்து நட” என்று காட்ட இப்போது அதிகமான நூல்கள் தோன்றிவருகின்றன. இது மகிழ்ச்சிக்குரியது. இதைவிட மகிழ்ச்சியானது. “இன்ன ஆசிரியரைப் பார்த்து நட.” என்று காட்ட நூலாசிரியர் தோன்றுவது தான்.


வாழ்வும் பாழ்

தீச்செயலைச் செய்ய மனம் நினைக்கிறது; ஆசை தூண்டு கிறது; இருட்டுத் துணை செய்கிறது சூழ்நிலை வெற்றியைத் தருகிறது. ஆனால், வாழ்வோ, மிக விரைவிற் பாழாகிவிடுகிறது.


கலைச் சிறப்பு

பரதநாட்டிய நடிகையின் உடல் நெளிவிலும், பாட்டாளி மக்களின் உடல் நெளிவிலும் கலையைக் காணலாம். செல்வர் விரும்புவது முன்னது. வறியவர் விரும்புவது பின்னது. முன்னதைக் காணப் பணமும், பின்னதைக் காண் குணமும்