பக்கம்:அறிவுக்கு உணவு.pdf/41

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கி.ஆ. பெ. விசுவநாதம்
39
 


அறிய முடியாதது

தமிழ்ப் பண்பை அறிய வேண்டுமானால், தமிழை அறிய வேண்டும். தமிழ் மக்களை அறிய வேண்டுமானால் தமிழ்ப் பண்பை அறிய வேண்டும். தமிழகத்தை அறிய வேண்டுமா னால், தமிழ் மக்களை அறியவேண்டும். இம்மூன்றையும் அறியாதவர்கள் தமிழகத்துச் சான்றோர்களை அறிய முடியாது.


வளராது வாழாது

தனக்கென்று ஒரு பல்கலைக் கழகத்தை நடத்தாத நாடு செழிக்காது. தனக்கென்று ஒரு பல்கலைக்கழகம் இல்லாத மொழி வளராது. தமக்கென்று ஒரு பல்கலைக்கழகத்தைத் தொடங்காத மக்கள் வாழார்.


திருத்து

நாட்டைத் திருத்த வேண்டுபவர்கள் மக்களைத் திருத்த வேண்டும். மக்களைத் திருத்த எண்ணுபவர்கள் சமூகத்தைத் திருத்தவேண்டும். சமூகத்தைத் திருத்த விரும்புபவர் தங்களைத் திருத்திக்கொள்ள வேண்டும்.


பின்பு வாழ்!

பழிச் செயல்களை விடு. பாவச் செயல்களை விலக்கு. பெரியோரைப் பேண். பொறுமையைக் கொள். பிறரை அறி. பின்பு உதவு. பிறகு வாழ்.

கேள்வியும் விடையும்

கேள்வி : மதம் இருப்பது நல்லதா? அழிவது நல்லதா? விளக்கமான விடை- வெளிப்படையாகத் தேவை.

விடை : மக்கள் காட்டுமிராண்டிகளாய் வாழ்ந்து கொண்டிருந்து குரங்குகளைப் போலக் கூட்டங்கூட்மாய்க் கூடிச் சென்று வாழும் நிலைமை மாறி, இருந்து வாழும் நிலைமை ஏற்பட்டவுடன், ஒழுக்கமாக வாழ்வதற்கு ஒரு சட்டம் தேவைப்பட்டது. பிறகு அதுவே காலத்துக்கும் இடத்துக்கும் ஏற்றவாறு பல மதங்களாய் மாறுதல் பெற்றிருக்கலாம். இப்போதுகூட மதம் மக்களின் ஒழுக்கத்தை நிலைநிறுத்திவரப் பயன்படுமானால், அது