பக்கம்:அறிவுக்கு உணவு.pdf/42

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
40
அறிவுக்கு உணவு
 


இருப்பதுபற்றித் தவறு ஒன்றுமில்லை; மதத்தை விட்டு விலகி மக்கள் ஒழுக்கமாக வாழக் கற்றுக்கொண்ட பிறகு, மதம் அழிந்து போவது பற்றிக் கவலைப்பட வேண்டுவதும் இல்லை.

கே: ஏமாற்றுதலும் ஏமாறுதலும் எப்படி உண்டாகின்றன?

வி: ஏமாற்றுதல் பிழைக்கப் பிழைப்பற்று, வாழ வகையற்ற மக்களால் நடத்தப்படுவது. ஏமாறுதல், ஆராயாமல் அன்பும் இரக்கமும் காட்டுவதால் ஏற்படுவது.

கே: நண்பர்களாய் இருப்பவர்களுள் நல்லவர் யார்? கெட்டவர் யார்? என்பதைத் தெரிந்து கொள்வது எப்படி?

வி: பகைத்துப் பார், உடனே தெரிந்துவிடும்.

கே: கேள்வி கேட்டால் சிலர் வைகின்றனரே, அது ஏன்?

வி: உள்ளத்தில் உண்மை இல்லாதபோது, சிலரது வாய் வையத் தொடங்கிவிடும்.

கே:ஆண் முந்தியா? பெண் முந்தியா?

வி: இக் கேள்வி முட்டை முந்தியதா, கோழி முந்தியதா? விதை முந்தியதா? மரம் முந்தியதா? என்பன போன்று இருக்கிறது. மரம் உண்டாகியே விதை உண்டாயிருக்க வேண்டும். மரம் எவ்விதம் உண்டாயிற்று என்னும் கேள்வி எழும்போது ஏமாற்றமே தோன்றும். உண்மை என்னவெனில், 'ஒன்று இல்லாமல் மற்றொன்று இல்லை என்பதே; என்றாலும், சைவத்தில் சக்திக்கு முதன்மை கொடுக்கப்பட்டிருக்கிறது.

கே:வாழ்க்கையில் வெற்றி அடைவது எப்படி?

வி: உள்ளத்திலே உண்மை. வாக்கிலே தெளிவு, தொழிலிலே திறமை, தொண்டிலே நேர்மை, துன்பத்திலே சகிப்பு:இவை ஐந்தும் அடைவதே வாழ்க்கையில் வெற்றி அடையும் வழி.

கே:மாணவர்கள் அரசியலில் தலையிடலாமா?

வி: ‘தலையிடலாம்’ என்பது சிலரது கருத்து: ‘கூடாது’ என்பது சிலரது கருத்து. என்கருத்து யாதெனில் மாணவர் அரசியலைக் கட்டாயம் தெரிந்து கொள்ளவேண்டும். பலவித கலையையும் படித்தும் கேட்டும் அறிந்து தீரவேண்டும். ஆனால், அரசியல் இயக்கங்