பக்கம்:அறிவுக்கு உணவு.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி.ஆ. பெ. விசுவநாதம்

41



க்ளில் படிப்பு முடியும்வரை தலையிடுதல் கூடாது. தலையிட்டால் அவர்கள் படிப்பும் பாழாகி, செலவிடும். பணமும் பாழாகி, கல்லூரியும் பாழாகி, அவர்களும் பாழாகி. அவர்களைப் பெற்றோரும் பாழாகி, நாடும் பாழாக நேரிடும்.


கே: காந்தியடிகள் செய்த தவறு என்ன?

வி: நாட்டிலே கல்வியை வளர்க்கும் முன்னே, மக்கள் அரசியலை அறியும் முன்னே, நாடாள்வதற்கு நல்ல மனிதர்களை உண்டாக்கும் முன்னே சுதந்திரத்தைப் பாடுபட்டுப் பெற்றதுதான் காந்தியடிகள் செய்த தவறு.


கே: அறிஞர் ஷா கருத்தை மறுத்ததேன்?

வி: காந்தியடிகள் இறந்தபோது உலகமே வருந்தியது. அறிஞர் ஷாவின் உள்ளத்தில் “காந்தியடிகள் சுடப்பட்டு இறந்தார்” என்ற செய்திதுன்பத்தை உண்டாக்கவில்லை. அவரது வாய் வருத்தம் தெரிவிக்கவும் இல்லை. இதற்கு மாறாக, “அளவுக்கு மீறி நல்லவராய் இருக்க விரும்பியதன் விளைவு இது” என்று நகையாடினார். இது ஷா செய்த தவறு. இமயம் போன்ற குற்றம். ஒரு குறிப்பிட்ட அளவு வரைதான் நல்லவராய் இருக்கவேண்டும் என்பது ஷாவின் கருத்து. அது அவரால் இயலலாம். ஆனால் அடிகளால் இயலாத ஒன்று.


கே: ஊசி போட்டுக்கொள்வது நல்லதா?

வி: தமிழகத்தின் தட்ப வெட்பத்துக்கு ஏற்ப வரும் நோய்களுக்குத் தமிழகத்தின் நீர் நிலத்துக்கு ஏற்ப முளைக்கும் செடி கொடிகளில் விளையும் இலை தழைகளே போதுமான மருந்தாகும். “ஊசி போட்டுக்கொள்வது உகந்ததன்று” என்ற கருத்தை, ஊசிமருந்துகளைக் கண்டுபிடித்த மேலைநாடுகளே இப்போது உணர்ந்து கைவிட்டு வருகின்றன. நாமும் விரைவில் கைவிடுவோம். நம் கிராம மக்கள் இப்பொழுதுதான் இதனைத் தொடங்குகிறார்கள். இது ஒரு வியப்பு.

பேசுவது போல எழுதப்பெறும் இலக்கியம் நல்லதல்லவா!

வி: ‘யார் பேசுவது போல?’ என்ற ஒரு கேள்விக்கு நீங்கள் விடையளித்தால், “நல்லதன்று” என்று விடை தானே கிடைத்துவிடும்.