பக்கம்:அறிவுக்கு உணவு.pdf/45

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கி.ஆ. பெ. விசுவநாதம்
43
 


சஷ்டியிலிருந்து வந்ததென்றும் கூறுவார்கள். இன்னும் கொஞ்சகாலம் போனால் ஆட்டுக்குட்டி என்பதுகூட ஆஷ்டு குஷ்டியிலிருந்தே வந்ததென்றும் கூறுவார்கள்.

கே: ஆபத்து இல்லாத பயணம் எது?

வி: ஆகாயக் கப்பலை எண்ணிக்கொண்டு கேள்வி கேட்பதாகத் தெரிகிறது. கப்பலிலும் விபத்து உண்டு; இரயிலிலும் உண்டு; மி திவண்டியிலும் உண்டு; இரட்டை மாட்டு வண்டி கவிழ்ந்தும், ஒற்றை மாட்டு வண்டி குடை சாய்ந்தும் விபத்து நேர்ந்திருக் கிறது.நடந்துசெல்லும்போதும் கல் தடுக்கிக் கீழே விழுந்த சிலர் உயிர் நீத்திருக்கின்றனர். இதனால் ஆபத்தில்லாத வழிப்பயணம் என்பது ஒன்றும் இல்லை! என்றாலும் புகைவண்டித் தொடரில் கடைசி பெட்டிகளில் இருப்பதும் உந்து வண்டியின் நடுவில் இருப்பதும் விபத்துக்களைச் சிறிது குறைக்கும்.

கே: ‘தெய்வீகம்’ என்பது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

வி: மக்கள் தன்மைக்கு அப்பாற்பட்டதெல்லாம் தெய்வத்தன்மை என்று நினைப்பது மக்கள் தன்மையாய் இருந்து வருகிறது. காந்தியடிகளிடத்தில் சாதாரண மக்களிடத்துக் காணப்படுவதை விட உயர்ந்த பண்புகள் சில காணப்பட்டதனால், மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்ட தெய்வத் தன்மையோடு அவரை இணைத்து விட்டது, நீங்கள் அறிந்ததுதானே!

கே: உலகத்துக்கு ‘ஆங்கில மொழி’ அவசியம் என்றால்,இந்தியாவுக்கு ‘இந்திமொழி’ அவசியம் அல்லவா?

வி: ‘நாற்பது லட்சம் ரூபாய் செலவில் உலகத்தைச் சுற்றிப் பார்க்க ஆகாயக் கப்ல் ஒன்று வாங்கினேன் என்று ஒருவர் சொன்னார்; அவர் மனைவி ஒப்பினாள். மற்றொரு நாள், ஒன்றரை இலட்சம் விலையில் இந்தியாவைச் சுற்றிப்பார்க்க ஆகாயக் கப்பல் ஒன்று வாங்கப் போகிறேன் என்று சொன்னார். அதற்கு மனைவி கேட்ட கேள்வி, உலகத்தைச் சுற்றும் ஆகாயக் கப்பலைக் கொண்டு இந்தியாவைச் சுற்ற இயலாதா? என்பதே. உங்கள் கேள்விக்கு விடையும் இதுதான். உலகத்துக்கு ஆங்கிலமும் இந்தியாவுக்கு இந்தியும் தேவைப்படுமானால், தமிழகத்துக்கு மட்டும் தமிழ்