பக்கம்:அறிவுக்கு உணவு.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

அறிவுக்கு உணவு




தேவையில்லாமற் போய்விடுமா? என்பது, எண்ணிப் பார்க்க வேண்டிய ஒன்றாகும்.

கே: ‘உண்மை’ என்பதன் பொருள் என்ன?

வி: தமிழ் மொழியில் உண்மை என்பதற்கு மூன்று சொற்கள் காணப்படுகின்றன. அவை உண்மை, வாய்மை, மெய்ம்மை எனப்படும். உள்+மை=உண்மை. உள்ளத்தின் தன்மை. வாய்+மை=வாய்மை; வாயின் தன்மை. மெய்+மை=மெய்மை; உடம்பின் தன்மை என்றாகும். இதன் கருத்து தீமையை மனத்தாலும் எண்ணாதே தீமையை வாயாலும் சொல்லாதே; தீமையை உடலாலும் செய்யாதே என்பதாகும். இத்தகைய பொருள் நிறைந்த சொற்களைத் தமிழில் அன்றிப் பிற மொழிகளிற் காண இயலாது.

கே: கம்பர், இளங்கோ, வள்ளுவர் இம் மூவரையும் பற்றிய உங்கள் கருத்தென்ன?

வி: கம்பர், தமிழ் மொழிக்குக் கலைக்கோயில் கட்டியவர். இளங்கோ, தமிழகத்துக்கு ஒரு கலைக்கோயில் கட்டியவர். வள்ளுவர் தமிழ் மக்களின் மாண்புக்கு ஒரு கலைக்கோயில் கட்டியவர். கம்பராமாயணத்தைவிடத் தமிழ்ச்சுவையுடையதும், சிலப்பதி காரத்தைவிடத் தமிழகத்தைப் படம் பிடித்துக் காட்டுவதும், திருக்குறளைப் போன்று தமிழன் பண்பை விளக்குவதுமான இலக்கியம் வேறில்லை. பொதுவாக இம் மூவரும் தமிழ் மக்களாற் போற்றப்பட வேண்டியவர்களே. ஆயினும், ஒழுக் கத்தை வலியுறுத்தி உலகிற்கு மறை தந்து உதவிய வள்ளுவரைத் தமிழ் மக்களேயன்றி, உலக மாந்தர் அனைவருமே அதிகம் போற்றக் கடமைப்பட்டிருக்கின்றனர்.

கே: திருவள்ளுவர் எம் மதத்தையும் சாராதவர் என்பது உங்கள் ஆராய்ச்சியின் முடிவானால், அம்முடிவுக்குக் காரணம்

வி: எதுவாயிருக்கலாம்? எல்லாச் சமயத்தினரும் திருவள்ளுவரைத் தத்தம் சமயத்தவர் என்று எண்ணுகின்ற ஒரே காரணந்தான்.

கே: சமூக சீர்திருத்தத்தைப் பற்றி அடிக்கடி பலரும்பேசிவருகின்றனரே! தமிழர் சமூகத்தைப் பொறுத்தவரை என்ன சீர்திருத்தம் வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?