பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

400 அறிவுக்கு விருந்து தாடகை தவத்திற்குரிய ஆசிரமங்களையும் குளிர் பூம்பொழில்களையும் அழித்து மருத நிலமாக இருந்த வனத்தைப் பாலை நிலமாக்குகின் ருள். இதனைக் கம்ப நாடன், உளப்பகும் பிணிப்புரு உலோபம் ஒன்றுமே அளப்பரும் குணங்களே அழிக்கும் ஆறுபோல் கிளப்பரும் கொடுமைய அரக்கி கேடி லா வளப்பரு மருதவைப்பு அழித்து மாற்றினுள்." என்று கூறுகின்ருன், தாடகையை உலோபத்தோடு ஒப்புமைப்படுத்தி அவளது பழிநிலையையும் இழி செய லையும் வெளிப்படுத்திய கவிஞன் வாக்கு நினையுந் தோறும் புதுப் புதுப் பொருளேத் தந்து நிற்கின்றது. உலோபம் என்பது பொருள்மேல் மண்டி மருள் கொண்டுள்ள பேராசை. அது மனிதனுடைய மனத் தைக் கவர்ந்து எவ்வழியும் மீள முடியாதபடி தன்வயப் படுத்தி நிற்கும் வன்மையுடையது. ஆகலின், கவிஞன் இதை உளப்பரும் பிணிப்பு எனக் குறித்துள்ளான். உள்ளத்தைப் பிணித்து நிற்கும் உலோபம் என்ற இழி குணம் நல்ல குணங்களையெல்லாம் நாசப்படுத்துவது போல, தாடகை ஒருத்தியே அவ்வனத்திலுள்ள இனிய கனிமரங்கள் அனைத்தையும் அழித்துத் தொலைத்தாள். நற்குணங்கள் நிறைந்தவர்களாக இருந்தாலும் உலோப குணம் அவர்களிடம் இருந்தால் அவர்கள் பிறரால் இகழப்படுவதை இன்றும் நாம் காணலாம். இந்த ஒரு குணம் ஏனைய குணங்களையெல்லாம் அழித்து விடு கின்றது. முதல் நாட்போரில் இராவணன் இலக்குவன் மீது வேலாயுதத்தை ஏவி அவனை மூர்ச்சையடையச் செய் 18. பாடி-தாடகை வதை 142