பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதையும் நீதியும் 103 தழுவிக்கொள்வாள். என்ருலும், அவ்வாறு அணைவதில் குழந்தையின் துயில் கெடுவதில்லை; அடுத்தக் கணத்தில் அவளும் தன்னை மறந்து உறங்கிவிடுவாள். அவ்விதமே கவிஞனும் இயற்கையை அதன் இன்ப அமைதி கலை யாமல் தழுவுவான். தன்னையும் உடனே மறந்து விடுவான்; இன்பப் பெருக்கில் மிதப்பான். அதிலிருந்து வெளிவந்தவுடன் இன்பவெறி பிடித்தவன் போல் சில சமயம் பாடுவான். அவன் அ னு ப வி த் த இன் பப் பெருக்கில் ஒன்றிரண்டு திவலைகள் அவன் பாடிய கவிதையில் அமைகின்றன. அதைப் பார்த்தே நாம் உயர்ந்த கவிதை என்று உள்ளம் பூரிக்கக் கொண் டாடுகின்ருேம். வ ர ல் மீ கி யி ன் உள்ளம் சுவைப் பெருக்கால் பூரித்திருக்கும்பொழுது இராமாயணத்தின் மூல சுலோகம் பிறந்ததாக வடமொழி வரலாறு கூறுகின்றது. இவற்றை யெல்லாம் நன்கு உணர்ந்த வட மொழி வாணர்கள் தலைவன் ஏ வ ல | ள ர் க் கு க் கூறுதல் போன்றவை அற நூல்கள் என்றும், நண்பர் ஒருவர்க் கொருவர் கூறும் முறையில் அமைந்தவை புராணங்கள் என்றும், கணவனுக்கு மனைவி உரைப்பது போன்றவை காவியங்கள் என்றும் ஒருவகைப் பாகுபாடு செய்து உள்ளனர். இல்வாழ்க்கையில் .ெ சா ற் க ளே விட உள்ளத்து உணர்ச்சிகளே ஆற்றல் மிக்கவை என்பதும், சொற்களால் உணர்த்துவதைவிடக் குறிப்பால் உணர்த் துவதே மிகுதி என்பதும் நாம் அறிந்தவை. இக்கார ணத்தால்தான் ஒரு சில வரிகளாலான அகத்துறைச் சங்கப் பாடல்கள் உணர்ச்சியைக் கொட்டி நம் உள்ளத் தைக் கொள்ளை .ெ கீ ள் ளு கி ன் ற ன . இத்தகைய உணர்ச்சிதான் காவியங்களிலும் அமைந்து கிடக் கின்றது. ஒழுக்கம், அறம் முதலியவற்றை அதிகமாகச்