பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதையும் நீதியும் 10:5 வேண்டிய தில்லை. பிரசாரகன் குறிப்புக்களைத் தந்து வழிகாட்டுவான்; கவிஞனே நமக்குக் கிளர்ச்சி யூட்டிப் புத்துணர்ச்சி தருவான்; அகத்தெழுச்சியைத் தூண்டி, புது ஆற்றலைத் தந்து, மகிழ்ச்சியூட்டுவான். வொர்ட்ஸ் வொர்த் போன்ற ஆங்கிலக் கவிஞர்கள் மெய்ப்பொருளை அடிப்படையாகக் கொண்டே கவிதை புனைந்தனர். எவர் எப்படிச் செய்தாலும், எந்த நோக்கத்தைக் கொண்டு கவிதை புனைந்தாலும் நீதியைக் கற்பனை, அனுபவம், உணர்ச்சி ஆகியவற்றுடன் கலந்துதந்தால் அக் கவிதை வாழ்க்கையின் பேருண்மைகளைப் பு தி ய .ே த ர் ஆற்றலுடனும் மதிப்புடனும் பெற்று விளங்கும் என்பதற் கையமில்லை. தமிழ் இலக்கியத்தைப் பொறுத்தவரை கவிதையின் சிறப்புக்கு ஓசை, சொல்லடுக்கு முதலியவை இன்றி யமையாதனவாக இருப்பினும், கவிதையின் பொரு ளமைப்பே முக்கியமானதாகக் கொள்ளப் பெறுகின்றது. தமிழர்கள் இன்பம் என்ற சொல்லுக்குக் கண்டபொருள் மிகவும் ஆழமுடையது. நிலைபேருடைய இன்பத்தைத் தருவது எதுவாயினும் அஃது உண்மையும் ஆழமும் உடையதாயிருத்தல் வேண்டும் என்பது அவர்கள் கொள்கை. மேட்ைடுத் திறஞய்வாளர்களிலும் சிலர் இக்கொள்கையை யுடையவர்கள். 'கவிதையை ஆராயுங் கால், நம்முடைய முதற்கவனம் கவிஞன்பால் செல்ல வேண்டும்; அவனுடைய ஆளுமையிலும் அவன் உலகைப்பற்றிக் கொண்டுள்ள மனப்பான்மையிலும் செல்லவேண்டும்; வாழ்க்கையை எவ்வாறு நோக்கி விளக்கந் தருகின்ருன் என்பதையும் கவனிக்கவேண்டும். இது வெளிப்படையாகவும் இருக்கலாம்; குறிப்பாகவும் இதனைப் பெறவைக்கலாம். கலை, வடிவம், வரலாறு போன்ற செய்திகளில் நாம் எவ்வளவு ஆழ்ந்திருந்த