பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. மொழியும் சமயமும்: தமிழ் மொழியின் தோற்றம் முதல் அதன் இலக்கியம் இமயமலைபோல் வளர்ச்சியடைந்ததுவரை அதன் வரலாற்றை நோக்கினுல் யாவும் சமயச் சார்பாகவே இருப்பதை அறியலாம். இன்று மொழி வரலாற்று வல்லுநர் மொழியின் பிறப்பைப்பற்றிப் பல கருத்துக் களைக் கூறினாலும், பண்டையோர் வடமொழியும் தென் மொழியும் முறையே சிவபெருமானுல் பாணினிக்கும் அகத்தியருக்கும் வழங்கப்பட்டவை என்றுதான் கூறி வந்தனர். வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி அதற்கினையாத் தொடர்புடைய தென்மொழியை உலகமெலாந் தொழுதேத்துங் குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப் பாகர், ' என்று சிவஞான முனிவர் தமது காஞ்சிப் புராணத்தில் கூறியிருப்பது இதனை வலியுறுத்தும். மொழியின் பிறப்பு இவ்வாருக, அம்மொழியிலுள்ள இலக்கிய வளர்ச்சியும்

  • குமரி மலரில் (ஜூன்-1952) வெளிவந்தது. 1. காஞ்சிப்புராணம்