பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#38 அறிவுக்கு விருந்து சமயத் தொடர்பாகவே இருக்கின்றது. சங்க காலத்தி லிருந்து இன்றுவரை தோன்றியுள்ள இலக்கியங்களைக் கூர்ந்து நோக்கினுல் இவ்வுண்மை விளங்காமற் போகாது. சங்க காலத்தில் சமயத் தொடர்பு கொண்ட இலக்கியங்கள் அதிகம் தோன்ருது போயினும், அதற்குப் பிறகு தோன்றித் தமிழ் மொழியை வளம்படுத்திய இலக்கியங்கள் பெரும்பாலும் சமயச் சார்பாகவே இருக் கின்றன. சங்ககாலத்தில், சமயம் ஒரு தனிக் கலையாகக் கருதப் பெறவில்லை. அப்போது சமயம் உணர்வு நிலையில் தான் இருந்தது; சமயம் அறிவு நிலையில் வைத்து எண்ணப்பட்ட காலத்திலிருந்துதான் தனிக் குறியீடு களும் இலக்கணங்களும் தோன்றலாயின. இயற்கை வாழ்வு வாழ்ந்த சங்ககால மக்கள் இறையுணர்வு கொண்டிருந்தனர். கடவுள், உயிர், உலகம் என்ற அளவில் சமயம் முடிந்தது என்று சொல்லி விடலாம். அவர்கள் வழிபாடு இயற்கையோடு ஒட்டியிருந்தது. மாயோன் மேய காடுஉறை உலகமும் சேயோன் மேய மைவரை உலகமும் வேந்தன் மேய இம்புனல் உலகமும் வருணன் மேய பெரும்புனல் உலகமும்; ” என்ற தொல்காப்பிய நூற்பாப் பகுதி ஒருவாறு இதனை விளக்கி நிற்கின்றது. சங்க இலக்கியங்களில் சில பாட்டுக் கள்தாம் கடவுளைப்பற்றி யிருக்கின்றன. பத்துப் பாட்டில் ஒன்ருகிய திரு முருகாற்றுப்படை முருகனைப் பற்றியது. எட்டுத் தொகை நூல்களில் கடவுள் வாழ்த் தாக வந்துள்ள பாட்டுக்கள் இறைவனைப் பற்றியவை. பரிபாடலில் உள்ள பாட்டுக்களில் எட்டு செவ்வேளைப் 2. தொல்-பொருள்-அகத்திணை-நூற்.5