பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழியும் சமயமும் #üß பற்றியவை; ஆறு பாட்டுக்கள் திருமாலைப்பற்றியவை. புறநானூற்றிலுள்ள பல பாட்டுக்களில் கடவுளைப்பற்றிய குறிப்புக்கள் மட்டிலுந்தான் காணக் கிடக்கின்றன. திருக்குறளில் கடவுள் வாழ்த்து என்ற அதிகாரம் கடவுளைப்பற்றியது; துறவறவியலில் சமய சம்பந்தமான கருத்துக்கள் பல வந்திருக்கின்றன. கடவுளை நோக்கி வழிபடுகின்ற அடியார்கள் உணர்வுத் தெளிவை அடைதலையே தமது நோக்கமாகக் கொண்டிருந்தனர். ஆண்டவனிடமிருந்து உயிர்கள் விரும்பத்தக்கவை எவை என்பதை, - - யாஅம் இனப்பவை பொருளும் பொன்னும் போகமும் அல்ல; தின்பசல் அருளும் அன்பும் அறனும் மூன்றும் உருளினர்க் கடம்பின் ஒலிதா ரோயே..." என்ற பரிபாடலின் அடிகள் விளக்கி நிற்கின்றன. சங்க காலத்தில் சமயம் என்று ஒன்று இராவிட்டாலும் சமய சம்பந்தமான கருத்துக்கள் மொழியில் புகுந்து கொண்டிருந்தன என்ற அளவில்தான் மொழிக்கும் சமயத்திற்கும் தொடர்பு இருந்தது என்று சொல்லலாம். அக் காலத்தில் சமயச் சார்பாகவே யாதொரு தனி இலக்கியமும் தோன்றவில்லை என்பதை மட்டிலும் உறுதியாகச் சொல்ல முடியும், சங்க காலத்திலேயே பெளத்த சமயம், ஆருகதம் எனப்படும் சமண சமயம், வைதிக சமயம், ஆசீவக சமயம் என்ற நான்கு வட்நாட்டுச் சமயங்கள் தமிழ் நாட்டிற்கு வந்துவிட்டன. ஒன்றற்கொன்று முரண்பட்ட கொள்கைகளையுடைய இவற்றுள் பெளத்த சமயம் தமிழ் நாட்டில் முதலில் வேர் ஊன்றி வலிமையை இாடல் 5 வி:76-51)