பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

延冠等 அறிவுக்கு விருந்து அடைந்துவிட்டது. கி. பி. 13-ஆம் நூற்ருண்டுவரை பெளத்த சமயம் தமிழ் நாட்டில் இருந்ததாக வரலாற்ருல் அறியலாம். பெளத்தர்கள் தமிழ் நாட்டில் செல்வாக்குப் பெற்றிருந்த காலத்தில் பல தமிழ் நூல்களை இயற்றித் தமிழ் .ெ மா ழி யை வளமடையச் செய்தனர். அவர்கள் இயற்றிய நூல்கள் யாவும் தங்கள் சமயக் கொள்கையை ம. க் க ளி ட ம் பரப்புவதற்காகவே தோன்றியவையாகும். அவற்றுள் ஒ ன் றி ர ண் டு நூல்களைத் தவிர ஏனையவை யாவும் அழிந்துபட்டன. பெளத்த சமயத்தின் பிறவிப் பகைவர்களான சமணரும் வைதிகரும்தாம் இவற்றை அழித்திருக்க வேண்டும் என்று நினைக்கவேண்டி யிருக்கின்றது. இன்று எஞ்சியுள்ள பெளத்த நூல்கள் இரண்டே அவற்றுள் ஒன்று இலக்கியம்; மற்ருெ ன்று இலக்கணம். ஐம்பெருங் காப்பியங்களில் மணிமேகலையும் குண்டலகேசியும் பெளத்தர்களால் இயற்றப்பட்டவை. இ வ. ற் று ஸ் மணிமேகலை ஒன்றுமட்டிலுந்தான் இன்று உளது; குண்டலகேசி பெயரளவில்தான் கேட்கப்படுகின்றது. குண்டலகேசி இறந்து பட்டாலும் அவற்றின் சில செய்யுட்கள் புறத்திரட்டு என்ற நூலிலும், தொல்காப்பிய உரை, யாப்பருங்கல விருத்தியுரை, வீரசோழிய உரை என்னும் இவற்றிலும் காணப்படுகின்றன. மணிமேகலை பலதிறத்தாலும் சிறப்புடையதாய்த் தமிழ்த்தாயினை அலங்கரிக்கும் மணிமேகலையாகவே விளங்குகின்றது. இந்நூல் பெளத்த சமயக் கொள்கைகளின் களஞ்சியம் என்று சொல்லலாம். பெளத்தர்களால் இயற்றப்பட்டு இன்று முழு வடிவாக இருக்கும் மற்றெரு நூல் வீரசோழியம்; இஃது ஐந்திலக்கணங்களையும்.சுருக்கமாகக் கூறுவது. இதனை இன்று தமிழ் மக்கள் வழக்கொழிந்த இலக்கண நூ ல க க் கருதுகின்றனர். இவ்வாறு பெளத்தர்கள் தங்கள் சமயத்தைப் பரப்புவதையே