பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தெய்வப் பரணி

3

றாறு என்று வரையறைக்குள் அடங்காத நொண்டி நாடகம், கப்பற்பாட்டு, வில்லுப்பாட்டு, கும்மிப்பாட்டு, கோலாட்டப்பாட்டு, ஆனந்தக்களிப்பு, கிளிக்கண்ணி, விலாசம், புலம்பல், உந்திபறத்தல், சாழல், தெள்ளேணம், வள்ளைப்பாட்டு, கவசம், ஓடப்பாட்டு, காதல், ஏற்றப் பாட்டு முதலான பல பிரபந்தங்களையும் காண்கின்றேம்.

போர்முகத்தில் ஆயிரம் யாளைகளைக்கொன்று வெற்றி கொண்ட வீரரைப் புகழ்ந்து பாடுவதைப் 'பரணி' என்று வழங்குவர்.

ஆனை யாயிரம் அமரிடை வென்ற
மானவ னுக்கு வகுப்பது பாணி[1]

என்பது இலக்கண விளக்கப் பாட்டியல் நூற்பா, பெரும் போர் புரிந்து வெற்றி பெற்ற வீரனைச் சிறப்பித்துப்பாடுவதையும் பரணிஎன்று வழங்கும் மரபுஉண்டு என்பதைப் பன்னிருபாட்டியல் என்ற நூலினால் அறிகின்றோம். இவ் வாறு பரணி நூல் அரசர் முதலியவர்கள் மேல் செய்யப் படுவதன்றி தெய்வங்கள் மீதும் தத்தம் ஆசிரியர்கள் மீதும் அறிஞர்களால் இயற்றப் பெற்று வழங்கும். கலிங்கத்துப் பரணி, தக்கயாகப் பரணி, இரணியவதைப் பரணி, கஞ்சவதைப் பரணி, அஞ்ஞவதைப் பரணி, மோகவதைப் பரணி, பாசவதைப் பரணி என்பன அவற்றிற்கு எடுத்துக்காட்டுக்களாகும். நூல்பாடுவோர் கொச்சகக்கலி என்னும் பாட்டின் உறுப்பாகிய ஈரடிக் கழித்தாழிசை என்ற உறுப்பை மேற்கொள்வது வழக்கம். பொதுவாக நூலில் கடவுள் வாழ்த்து, கடை திறப்பு. காடு, காளி கோவில் முதலிய பல்வகைச் சிறப்புக்களும் பல்வேறு சுவைகள் கொப்புளிக்கும்படி அமைக்கப்பெறும்.


  1. 1 இலக்கண வினா- நூற்-79