பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழியும் சமயமும் 419 பாமர மக்களின் மனத்தின் மீதும் இலக்கிய வானம் கவிந்தது. அவர்கள் சுவைத்து அதுபவிக்கக் கூடிய முறையில் கவிதை வெள்ளம் பெருக வேண்டும் என்ற கருத்து கருக்கொண்டு வளர்ந்து வெற்றியும் பெற்றது. புதுக்காப்பியஞ் செய்யப் புகுந்த கவிஞர்கள் தாமறிந்த மக்களையும் அவர்கள் வாழ்க்கையையும் பொருளாக அ ைம த் து ப் பாடினர். அக் காவியங்கள் யாவும் சாதாரணமாகக் கடவுள்மீதுதான் அ ைம ந் த .ை இவற்றுள் திரிகட ராசப்பக் கவிராயர் செய்த குற்ருலக் குறவஞ்சி’யும், மதுரகவிராயர் செய்த திருக்கச்சூர் 'நொண்டி நாடகமும், பெயர் தெரியாத ஆசிரியர் ஒருவர் செய்த முக்கூடற் பள்ளும் மிகவும் சிறப்படைத்தன. இதே காலத்தில் தோன்றிய அருளுசலக் கவிராயரின் 'இராம ந | ட க ம்', கோபாலகிருஷ்ண பாரதியாசின் 'நந்தன் சரித்திரம்', அண்ணுமலை ரெட்டியாரின் "காவடிச்சிந்து', அருணகிரியாரின் திருப்புகழ்' என்பன மக்கள் மனத்தைக் கவர்ந்துள்ளன. இவை யாவும் சமயச் சார்புள்ள நூல்களே. தாங்கள் சமயப் பிரசாரம் செய்யும் பொது மக்களிடையே போதுமான தமிழறிவு இல்லாததற்குக் காரணம் தமிழில் உரைநடை நூல்கள் இன்மையே என்று மேனுட்டுக் கிறித்தவ அறிஞர்கள் அறிந்தனர். முதன் முதலில் வீரமா முனிவர் பொதுமக்களுக்கென்று “பார மார்த்த குருகதை’ என்ற நகைச்சுவை ததும்பும் உரை நடை நூல் ஒன்றை வெளியிட்டார். இதுதான் தமிழில் தோன்றிய முதல் உரை நடை நூல் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். பின்னர், அவர் கிறித்தவ மத போதகர்களுக்கென "வேதியர் ஒழுக்கம்" அல்லது "உபதேச ரத்னகரம்" என்ற உரை நடை நூலை எழுதினர். பாதிரிமார்கள் தங்கள் சமய நூல்களை மொழி