பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#2s; அறிவுக்கு விருந்து பெயர்த்தது போலவே, தமிழர்களும் பாரதத்தையும் கம்பராமாயணத்தையும் உரை நடையில் எழுதினர். சைவப் பெரியார் ய ர ழ் ப் பா ன ம் ஆறுமுக காவலர் ஆங்கிலமும் கற்றுப் பெரிய புராணம், திருவிளையாடற் புராணம் முதலிய சைவ இலக்கியங்களை உரை நடையில் வெளியிட்டுப் பாதிரிமார்களை எதிர்த்துப் பிராசாரம் செய்தார். இவ்வாருக முதலில் தோன்றிய உரை நடை நூல்கள் யாவும் சமயச் சார்பாகவே இருத்தல் கவனிக்கத் தக்கது. - இந்த நூற்ருண்டில் தேசீய உணர்ச்சியால் பாடப் பெற்ற பாடல்கள் யாவும் சமயச் சார்பாக இராவிடினும், தமிழ்த்தாய், பராசக்தி, காளிதேவி, க ண் ண ன் ஆகியவர்கள் மீது பாடப்பெற்றுள்ள பாட்டுக்கள் யாவும் சமயச் சார்பற்றவை என்று சொல்வதற்கில்லை. சுதந்திரத்தேவி மீது பாடியுள்ள பாட்டுக்களில் தெய்வ உணர்ச்சியின் மணம் கமழத்தான் செய்கின்றது. ஆகவே, சங்க காலத்திலிருந்து இன்று வரை த மி ழி ல் தோன்றியுள்ள இ லக் கி யங் களி ல் பெரும்பாலானவை சமயச் சார்பாக உள்ளன என்பதும், சமயப் பிரசாரத்திற்கு இலக்கியங்களைத் துணையாகக் கொண்டனர் எ ன் பது ம், இந்நாட்டில் பிறந்த சமயங்களும் புகுந்த சமயங்களும் செய்த சமயத் தொண்டுகளே இலக்கியச் செல்வத்தை மிகுவித்தன என்பதும் நாம் அறியும் உண்மைகளாகும். ஆதலால் பண்டிருந்தே மொழிக்கும் சமயத்திற்கும் நெருங்கிய உறவு ஏற்பட்டு அந்த உறவால் இரண்டும் வளர்ந்து வளமடைந்து வருகின்றன என்பது ஆராய்ச்சிக் குரியது.