பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. பெளத்தர்கள் வளர்த்த பைந்தமிழ்: மேது நாட்டைப் பொறுத்தவரை சமயத் தொண்டும்: மொழித் தொண்டும் இனைந்து செல்கின்றன என்று கூறலாம். தமிழ் இலக்கிய வரலாற்றைப் பார்த்தால் சமயவளர்ச்சி தமிழ் வளர்ச்சிக்கு எவ்வாறு துணைபுரிந் திருக்கின்றது என்பது தெரியவரும். சமய மாற்றம் செய்வதற்காக நமது நாடு போந்த சமயத் தொண்டர்கள் யாவரும் தாய்மொழியின் ஆற்றலை நன்குனர்ந்தவர்கள். பிறந்தது முதல் இறக்கும்வரை மக்கள் கருத்தினைப் பிறருக்கு உ ண ர் த் தி உதவக்கூடிய தாய்மொழி மூலம்தான் கருத்துக்களை எளிதாக உணர்த்த முடியும் என்ற பேருண்மையை ந ன் க றி ந் த மூதறிஞர்கள் அவர்கள். இந்த உண்மையை இன்றைய அரசியலாரும் கல்வி நிபுணர்களும் ஓரளவு உணர்ந்து வருகின்றனர். ஒரளவு உணர்ந்தாலும் வி ைர ந் து செயலாற்றத் தயங்குவது வருந்தத்தக்கதாகும்; விடுதலை பெற்ற நாட்டில் அது நாணப்படத்தக்க செய்தியுமாகும். பெளத்த சமயம் தமிழ்நாட்டில் பரவிய காலம்: வடநாட்டிலிருந்து தமிழ் நாடு போந்து செல்வாக்குப் பெறுவதற்காகப் போட்டியிட்ட பெளத்தம், சமணம், குமரிமலரில் ஜூலை 1956) வெளிவந்தது.