பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெளத்தர்கள் வளர்த்த பைந்தமிழ் i23 உலகெங்கும் பரப்பினர். புத்தர் நிர்வாண நிலையை எய்திய பிறகு அவரைப் பின்பற்றி யொழுகிய பிட்சுக்கள் பல நாடுகளுக்குச் சென்று சங்கங்களை அமைத்துக் கொண்டு தம் சமயத்தைப் பிரசாரம் செய்தனர். தமிழ் நாட்டில் அரசர்கள், வணிகர்கள், செல்வர்கள் முதலி யோரிடம் பொருளுதவி பெற்று ஆங்காங்கு விகாரை களையும் பள்ளிகளையும் நிறுவிச் சமயப்பணி புரிந்தனர். பெளத்தத் துறவிகள் தம்மிடம் வரும் பிணியாளர்கட்கு இலவசமாக மருந்து கொடுத்தும், சிறுவர்கட்கு இலவசக் கல்வி நல்கியும் பணியாற்றினர். சாதிவேறுபாடு கருதாது அவர்கள் அளித்த தொண்டு மிகவும் பாராட்டற்பாலது. தாய்மொழி மூலம் தற்சமயம் தமது கோட்பாட்டை பரவச் செய்யும் கருத்துடைய இவர்கள் தமிழ்நாட்டிலிருந்த போது தமிழ் மொழியைக் கற்று அதன் மூலம் தம் சமயக்கருத்துக்களைப் பரப்பினர். சிறுவர்களுக்கும் தாய் மொழியைக் கற்பித்து வந்தனர். 'பள்ளிக்கூடம் என்ற சொல்லே இதனை நன்கு விளக்கும். பெளத்த பிட்சுக்கள் வாழ்ந்த மடங்களைப் பள்ளி என வழங்குவர். அப்பள்ளி களின் கட்டிடங்களில் பாடசாலைவைத்து சிறுவர்களுக்குப் பயிற்றினதால் அந்த இடங்களுக்குப் பள்ளிக்கூடம்’ என்ற பெயர் உண்டாயிற்று. பெளத்த சமயம் நம் நாட்டைவிட்டு மறைந்த பிறகும் பள்ளிக்கூடம்’ என்ற சொல் தமிழ் மொழியில் நிலைத்து விட்டது. பெளத்தர்கட் யகுரி சிறப்பான நாட்களில் பொதுமக்களைத் தம் பள்ளிகளுக்கழைத்து திரிபிடகம், புத்தஜாதகக் கதைகள், புத்த சரித்திரம் முதலிய நூல்களை ஓதி அவர்கட்குச்சமய போதனையை அளித்தனர். இன்று தமிழ்நாட்டிலுள்ள கிறித்துவப் பாதிரிமார்கள் அ வ் வ று தானே தம் சமயத்தைப் பரப்பி வருகின்றனர்? கல்வி நிலையங்களையும் ஓரளவு சமயத்தைப் ப ர ப் பு ம் சாதனங்களாகக் கொண்டுள்ளதை எவரும் எளிதில் அறியலாம்.