பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$34 அறிவுக்கு விருந்து தமிழ் பெளத்தப் புலவர்களும் அவர்கள் இயற்றிய நூல்களும்: பெளத்த சமயம் தமிழ் நாட்டில் செல்வாக்குப் பெற்றிருந்த காலத்தில் பல பெளத்த சமயப் புலவர்கள் வ ழ் ந் தி ரு ந் த னர் . சீத்தலைச் சாத்தனர். இளம் போதியார் நாதகுத்தனுர், புத்தமித்திரர். பெருந் தேவனுர் போன்றவர்கள் யாவரும் புத்த சமயத்தைச் சேர்ந்தவர்களே. இவர்கள் பல தமிழ் நூல்களை இயற்றித் தமிழ் மொழிக்கு ஏற்றம் அளித்தனர். அவ்வாறு இயற்றப் பெற்ற நூல்களுள் ஒரு சிலவற்றைத் தவிர எல்லா நூல்களும் அழிந்து பட்டன. பெளத்த சமயத் திற்குப் .ெ ப. ரு ம் ப ைக வர்களாக இருந்த சமணரும் வைதிகரும் அவற்றை அழித்திருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். பெளத்த சமய வீழ்ச்சிக்குப் பிறகு நடைபெற்ற சமயப் போரில் வைதிக மதம் சமணமதத்தை அழித்துவிட்ட போதிலும், ஒரு சில சமணர்கள் தமிழ்நாட்டில் ஆங்காங்கு இல்லாமல் இல்லை. எனவே, சமண நூல்களை இவர்கள் காத்து வந்தனர். தமிழ் நூல்களைப் பாதுகாக்கத் தமிழ்ப் பெளத்தர்கள் இல்லாமையால் அவை அழிந்துபட்டன. இலங்கை, பர்மா முதலிய நாட்டு பெளத்தர்கள் பாது காத்தமையால் பாலிமொழியிலுள்ள தமிழ் நாட்டுப் பெளத்த ஆசிரியர்கள் இயற்றிய நூல்கள் மட்டிலும் அழி ந் து படா ம ல் இ ன் று ம் நி ன் று நிலவு கின்றன. இப்போது தமிழில் இறந்து படாமலுள்ள பெளத்த நூல்கள் இரண்டே, ஒன்று. மணிமேகலை என்ற பெளத்த காவியம்; மற்ருென்று, வீரசோழியம் என்ற இ ல க் கண ம் . இவை இர ண் டு தாம் முழுநூல்களாகக் கிடைத்திருப்பவை. இவற்றைத் தவிர தாலைந்து நூல்களின் பெயர்கள் மட்டிலும் வழங்கப்படு கின்றன. இனி, த மி N லு ள்ள பெளத்த நூல்களை ஒரு சிறிது நோக்குவோம்,