பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெளத்தர்கள் வளர்த்த பைந்தமிழ் £27 என்ற இந்நூற் பாயிரத்தின் முதற் செய்யுளால் அ றி ய லாம். இந்நூலை இயற்றுவித்தவன் வீர இராசேந்திர சோழ மன்னனுவான். இதனை இந்நூற் பெயராலும், தேமேவிய தொங்கல் தேர்விர சோழன் திருப் பெயரால் பூமேல் உரைப்பன்’ என்ற பாயிரத்தின் மூன்ரும் செய்யுட் பகு தி யா லு ம் அறியலாம். மேவிய வெண்குடைச் செம்பியன் வீர இராசேந் திரன்றன், தாவியல் செந்தமிழ் என்ற இந்நூலுக்கு உரை இயற்றியவர் பெருந்தேவனுர் என்பவர்; இவள் புத்தமித்திரளுரின் மாளுக்கர். இவர் பாரதம் பாடிய பெருந்தேவளுரினும், பிற்காலத்திலிருந்தபாரதவெண்பா பாடிய பெருந்தேவளுரினும் வேருனவர்." இந்நூலுக்கு வீர சோழியக் காரிகை என்ற பிறி தொரு பெயரும் உண்டு. இது எழுத்ததிகாரம், சொல் லதிகாரம், பொருளதிகாரம், யாப்பதிகாரம், அலங்காரம் என்ற ஐந்து அதிகாரங்களைக் கொண்டது. எழுத்ததி காரம் சந்திப்படலம் என்னும் ஒரே படலத்தையுடைய 28 செய்யுட்களைக் கொண்டது. சொல்லதிகாரம் 9 செய்யுட்களை யுடைய வேற்றுமைப் படலம், 8 செய்யுட்களை யுடைய உபகாரகப் படலம், 8 செய்யுட்களை யுடைய தொகைப்படலம், 8 செய்யுட்களையுடைய தத்திதப்படலம், 11 செய்யுட்களை யுடைய தாதுப் படலம் 13+2 செய்யுட்களையுடைய கிரியா பதப் படலம் என்னும் ஆறு படலங்களையுடையது. ஏனைய பொருள், யாப்பு, அணி என்ற மூன்று அதிகாரங்களும் முறையே 21, 35, 41 செய்யுட்களையுடைய பொருட்படலம், யாப்புப் படலம், அலங்காரப் படலம் என்னும் ஒவ்வொரு படலமுடையன. நூற்பாயிரம் மூன்று செய்யுட்களைக் கொண்டது. 6 : உரையில் இக் காலத்தில் வேறு எவ்விடந்தும் காணம்பெருத பல நூற்பாக்களும், பல செய்யுட்களும் உள்ளன்; அவை இன்ன நூலைச் சார்ந்தவை என்று சொல்ல முடியவில்லை.