பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தெய்வப் பரணி

5

கானாணும் மலையாணும் கடலாணும்
சூழ்கிடந்த கலிங்கப் பூமி
தானரண முடைத்தென்று கருதாது
வருவதுமத் தண்டு போலும்.[1]

[கான்-காடு; அரணம்-அரண்[

என்று கூறிப் போர் தொடங்குகின்றாள்; போர் கடுமையாக நடைபெறுகின்றது; இறுதியில் கலிங்கவேந்தன் தோற்றோடுகின்றான். கருணாகரன் கலிங்கத்தை எரிகொளுவி அழித்துப் பல்வகைச் செல்வங்களைக் கவர்ந்து வாகைமாலை சூடிக் குலோத்துங்கன் அடியை வணங்கி நிற்கின்றான். இந்த வரலாற்று நிகழ்ச்சியைக் கருவாகக் கொண்டு தனது கற்பனைத் திறத்தால் நூற் பொருளை அமைத்துக் காவியத்தைப் படைக்கின்றார் ஆசிரியர். நூல் கவிஞரின் கற்பனையிலிருந்து மலர்ந்த ஓர் ஈடற்ற சிறு காப்பியம். காவியத்தில் இரு வேறு உலகங்களைப் படைத்துக் காட்டுகின்றார். ஒன்று. மக்கள் உலகம்; மற்றொன்று, பேய்கள். உலகம், பதின்மூன்று அத்தியாயங்களைக் கொண்ட அந்நூலில் கடவுள் வாழ்த்து போக நான்கு அத்தியாயங்கள் மக்கள் உலகினைப் பற்றியவை. ஐந்து அத்தியாயங்கள் பேய்கள் உலகினைக் காட்டுபவை; மூன்று - அத்தியாயங்கள் பேய்களின் தலைவியாகிய காளிதேவி, அவள் வாழும் சூழ்நிலை, அவளது கோவில் ஆகிய செய்திகளைப்பற்றியவை.


[3]

இனி, நூலின் அமைப்பை ஒரு சிறிது காண்போம். நூலைத் தொடங்குமுன் பாட்டுடைத் தலைவனாகிய குலோத்துங்கன் நேடிது நின்று வாழுமாறு சிவபெரு-


  1. 2 தாழி---376, 377