பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

其器演 அறிவுக்கு விருந்து 'உலும்பினி வனத்துள் ஒண்குழைத் தேவி வலம்படு மருங்குல் வடுநோய் உருமல் ஆன்ருேன் அவ்வழித் தோன்றினன் ஆதலின் ஈன்ருேன் ஏழ்நாள் இன்னுயிர் வைத்தாள். என்ற நான்கு அடிகளையும் மேற்கோள் காட்டி, "இது விம்பசாரக்கதை என்னும் காவியம்; பெளத்தருடைய நூல்; அ த ன் க ட் கண் டு கொள் க" என்று குறிப்பிட்டுள்ளார். இதே அடிகள் ஞானப்பிரகாசராலும் சிவஞானசித்தியார் உரையில் காட்டப்பெற்றுள்ளன. செய்யுள் நடையை நோ க் கி ன ல் இக் காப்பியம் ம ணி ேம க லே ைய ப் போன்று ஆசிரியப்பாவில்ை அமைந்திருக்க வேண்டும் என்று கருத இடம் உண்டு. எழுத்துக்கலைத் தொண்டு : .ெ ப ள த் த ர் க ளி ன் தமிழ்த்த்ொண்டு இலக்கிய வளர்ச்சியுடன் நின்றுபோக வில்லை; .ெ ம N த் து ைற யி லு ம் அ. வ ர் க ள் தொண்டாற்றினர். பிராமி எழுத்தைத் தமிழ்நாட்டில் புகுத்தியவர்கள் பெளத்தர்களே. பிராமி எழுத்து புத்தர் பிரானல் கண்டறியப் பெற்றது என்பது பெளத்தர்களின் நம்பிக்கை. இச்செய்தி rேமேந்திரர் என்பவரால் அவர் இயற்றிய'புத்த ஜனனம் என்னும் நூலில் கூறப்பெற் றுள்ளது. கி. மு. மூன்ரும் நூற்ருண்டில் அசோக மன்ன ரும் அவரால் பிறநாடுகளுக்கு அனுப்பப்பெற்ற பெளத்த பிட்சுக்களும் பிராமி எழுத்தை எல்லா இடங்களிலும் பரவச் செய்தனர். அசோகர் தமது கல்வெட்டுக்களில் பிராமி எழுத்தைப் பயன்படுத்தியதால் பிராமி எழுத்தை அசோகர் எழுத்து என்றும் வழங்குகின்றனர். பிராமி எழுத்து தமிழ்நாட்டில் வழங்கி வந்தமைக்கு இரண்டு சான்றுகள் உள்ளன. ஒன்று: பாண்டிய நாட்டிலுள்ள அழகர்மலை,திருப்பரங்குன்றம், கீழைவளவு, குன்றக்குடி,