பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. கிறித்தவர்களின்தமிழ்த் தொண்டு: தமிழ்மொழி தமிழகத்திலுள்ள எல்லாச் சமயத் தார்க்கும் உரிய செம்மொழியாக வழங்கி வருவதை எண்ணிப் பார்ப்பார் எளிதில் உணர்வர். தமிழகத்தில் பிறந்த சமயங்களும் புகுந்த சமயங்களும் தமிழைப் பேணி வளர்த்தமை, தமிழ் இலக்கிய வரலாறு காட்டும் சிறந்ததோர் உண்மை. தமிழ்மொழிக்குத் தொண்டு செய்தவர்களில் ஐரோப்பியரும் உளர்; ஆங்கிலேயரும் உளர். இவர்களில் பெரும்பாலோர் மேலை நாட்டு மொழிகளைப் பழுதற ஓதிப் பயன்பெற்ற பெரியார்கள். இவர்களில் சிலர் தமிழரின் கலைச்செல்வத்தை மேலை நாட்டாருக்குக் காட்டி, தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தனர். தமிழில் உரை நடைச் செல்வத்தை வளர்த்து, தமிழ்த் தாயைப் பேணினர் சிலர். இன்னும் சிலர் தமிழ் மொழியின் உயிர்நாடியாகவுள்ள இலக்கணங்களைத் தெளிவுபெறக் கற்று நம்மொழியின் தொன்மையையும் செம்மையையும் உணர்த்தி மேலை நாட்டார் நம் மொழியின் உயர்வை மெச்சும்படி செய்தருளினர். சிலர் தமிழ் மொழிக்கே புதியதோர் மொழியாராய்ச்சித் துறையை வகுத்துக்காட்டி 'திராவிட மொழிகள்' என ஒரு குடும்பம் உளது என்று

  • குமரிமலரில் (திசம்பர்.1953) வெளிவந்தது.