பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

அறிவுக்கு விருந்து

மான்,, திருமால் நான்முகன், ஞாயிறு, யானைமுகன், ஆறுமுகன், நாமகள், உமை, அன்னையர் எழுவர் ஆகியவர்களாஇ வணங்கி பராவுகின்றார் ஆசிரியர். எடுத்துக்கட்டுகளாக

பூமாதுஞ் சமயமாதும் பொலிந்து வாழும்
புயத்திருப்ப மிகவுயரத் திருப்பன் என்று
நாமாதும் கலைமாதும் என்னச் சென்னி
நாவகத்துள் இருப்பாளை நவிலு வாமே.

எண்மடங்கு புகழ்மடந்தை நல்லன் எங்கோ
யானவான்பால் இருப்பதுநன் றென்பாள் போல
மண்மடந்தை தசீர்த்தி வெள்ளை சாத்தி
மகிழ்ந்தபிரான் வளாவர்பிரான் வாழ்க என்றே[1]

[பூமாது-மண்மகள்; சயமாது-வெற்றிமகள்; சென்னி- குலோத்துங்கன்; சீர்த்தி-முகுபுகழ்]

என்ற நாமகள் வணக்கத் தாழிசைகளை காண்க. முதசையில் அபயனின் புகழ் மேம்பாடும் குறிக்கப் பெற்றிருப்பதை பன்முறைப் பாட்டுக்களை இசை யூட்டிப் படித்து மகிழ்க. இப்பகுதியிலுள்ள கடவுளர் பாடல்கள் அனைத்தும் இங்கனமே படித்து இன்புறத் தக்கவையாகும்.

இதனை அடுத்துக் 'கடை திறப்பு' என்ற பகுதி வருகின்றது!. கலிங்கப் போர் மேற் சென்ற வீரர் மீண்டு வரக் காலம் தாழ்த்தியதாகவும் அதுகண்ட அவர்களுடைய காதல் மகளிர் ஊடல் கொண்டு கதவடைத்துக் கொண்டதாகவும் கொண்டு புலவர் தாம் பாடப்போகும் அக் கலிங்கப் போர்ச் சிறப்பைக் கேட்டு மகிழ்தற்


  1. 3.தாழி-13,14.