பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

j 43 அறிவுக்கு விருந்து காட்டினர். ஆந்திர நாட்டில் அலுவல் பார்த்த சி. பி. பிரெளன் என்ற அறிஞர் தெலுங்கு மொழியினைத் துருவி யாராய்ந்து தமது கருத்துக்களைக் கட்டுரைகள்ாக வெளிப்படுத்தினுள். நீலகிரியில் வாழும் தோடர் மொழிச் சொற்களைப் போப்பையர் திரட்டி வெளியிட்டார். இந்த நிலையில்தான் கால்டுவெல் தென்னுட்டிற்கு வத்து தமிழ் .ெ மா ழி யி லு ள் ள நூ ல் க ளை முறையாகக் கற்ருர்; மொழியாராச்சியில் முன்னணியில் நின்ற செருமானிய அறிஞர்கள் எழுதியுள்ள நூல்களை யெல்லாம் கற்று அறிவதற்காகச் செருமானிய மொழியை யும் கற்ருச். ஏற்கெனவே அறிஞர்கள் வெளியிட்டிருந்த கருத்துக்களையும் தாம் பெற்ற தமிழ் அறிவையும் கொண்டு தமது நுண்ணறிவால் திராவிட மொழி நூல் ஒன்றை வரைய எண்ணங்கொண்டார். அங்ங்ணமே கி. பி. 1856-ஆம் யாண்டில் 'திராவிட மொழிகளின் 9triosuèssorio” (A Comparative Grammar of Dravidian Languages) or sir in or & ஆ ங் கி ல மொழியில் வெளியிட்டார். இதுதான் முதன் முதலாகத் தோன்றிய திராவிட மொழி நூல், இதை வெளியிட்ட பெரியாரை "திராவிட மொழிநூலின் தந்தை” எ ன் று இன்று அறிஞர் உலகம் பாராட்டுகின்றது. திராவிட மொழிக் குடும்பத்தில் பன்னிரண்டு மொழிகள் உள்ளன . என்று கால்டுவெல் விளக்கிப் போந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளுவம், குடகு என்ற ஆறு மொழிகளும் திருந்திய மொழிகளாகும். நீலகிரியில் வாழும் தோடர் பேசும் துதம் மொழியும், அதேமலையில் உறையும் கோதகர்கள் பேசும் கோதம் மொழியும், நடு இந்தியாவில் குன்று களிலும் காடுகளிலும் வாழும் மக்கள் பேசும் கோண்டு மொழியும், கோண்ட வனத்தின் கிழக்குப் பாகத்திலும்