பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

茹姆 அறிவுக்கு விருந்து பெற்றுள் ளன. இஃது எவ்வளவு சிரமமான காரியம் என்பது நமக்குத் தெரியும். இந்தச் சங்கடங்களை யெல்லாம் நீக்கி எவரும் எளிதில் சொற்பொருள் காண மேளுட்டு அறிஞர்கள் அகராதியைத் தொகுத்தனர். அகராதியில் சொற்கள் தமிழ் நெடுங்கணக்கின் வரிசையில் தொகுக்கப்பெற்று இருப்பதால் எவரும் எளிதில் சொற்பொருளை அறிந்து கொள்ள முடியும். முதன் முதலில் அகராதியை எழுதும் முறையைத் தமிழருக்குக் காட்டியவர் வீரமாமுனிவர்; ஆதலால் 'தமிழ் அகராதியின் தந்தை' என்று அவரை வழங்கலாம். அவர் எழுதி கி. பி. 1782-இல் வெளியிட்ட "சதுரகராதி'தான் பிற்காலத்தில் எழுந்த பேரகராதிகட் கெல்லாம் அடிப்படையாக இருந்தது. தமிழ், மக்களிடையே சமயத்தைப் பரப்ப வேண்டு மானுல் த மி N ல் தா ன் போதிக்கவேண்டும் என்று உணர்ந்தனர் பாதிரிமார்கள். அதனுல் தாமும் தமிழ் கற்க வேண்டிய இன்றியமையாமை ஏற்பட்டது. இதைக் கற்பதற்குக் கருவியாக அகராதி ஒன்று இயற்றவேண்டி நேரிட்டது. இ ந் த அ வ சி ய த் ைத உணர்ந்த வீரமாமுனிவர் அகராதியை இயற்றும் பணியை நிறைவேற்றினர். இவரைப் பின்பற்றி பெப்ரீஷியஸ், இராட்லர், டெயிலர், உவின்ஸ்லோ என்ற பல மேட்ைடுப் பாதிரிமார்கள் பல வி த அகராதிகளைப் பல்வேறு சந்தர்ப்பங்களில் இயற்றினர். இ வ் வா று பலர் அகராதியை வெளியிடும் பணி யி ல் இறங்கியதன் விளைவாகப் பல இடர்ப்பாடுகளையறிந்து இத்துறையில் நல்ல அனுபவம் ஏற்பட்டது. இந்த அனுபவத்தைக் கொண்டு சென்னைப் பல்கலைக் கழகத்தினர் தமிழ் லெக்ஸிகன்’ என்ற அ. க ர தி யை வெளியிட்டனர்.