பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வப் பரணி #7 உடலின்மேல் பலகாயஞ் சொரிந்து பின்கால் உடன் பதைப்ப உதிசத்தே ஒழுகும் யானே கடலின்மேல் கலந்தொடரப் பின்னே செல்லும் கலம்போன்று தோன்றுவன காண்மின் காண்மின்." (காயம்-புண், சொரிந்து-குருதியினைச் சொரிந்து; பின்உடலின் பிற்பகுதி, உதிரம்.குருதி, ஒழுகுதல்-மிதந்து செல்லல்; கலம்-மரக்கலம் என்பது குருதி வெள்ளத்தில் யானை மிதந்து சென்ற காட்சி. யானே குருதி வெள்ளத்தில் மிதந்து செல்வது கடலில் மிதந்து செல்லும் மரக் கலத்தை யொத்திருக் கின்றது. விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண மேன்மேலும் முகமலரும் மேலோர் போலப் பருத்தினமும் கழுகினமும் தாமே புண்ணப் பதுமமுகம் மலர்த்தாசைப் பார்மின் பார்மின்." [வறியவர்-ஏழையர்; மேலோர்-இல்லறத் துயர்ந்தோர்; பதுமம்-தாமரை) என்பது வீரர்கள் முகமலர்ச்சியுடன் இறந்து கிடக்கும் காட்சி. செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருக்கும் இல்லறத்தோர்போல் தாம் இறந்த பின்னரும் தம் உடலங்களைப் பருந்துக்களும் கழுகுகளும் உண்பதைக் கண்டு முகமலர்ச்சியுடன் கிடக்கின்றனர் வீரர்கள். மாமழைபோல் பொழிகின்ற தான வாரி மறுத்துவிழுங் கடகளிற்றை வெறுத்து வானேச் 18, தாழி-475, 17. தாழி-477 அ. வி. 2.